நம் வாசகர்களுக்காக இரண்டு மென்பொருட்கள் இலவசமாக தருகிறார்கள்

நண்பர்களே இதுவரை வெளிவரும் மென்பொருட்கள் வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் இலவசமாக ப்ரோமோசன் செய்யும் அனைத்துமே நேரடியாக தமிழ் பிளாகிற்கோ தமிழ் தளத்திற்கோ இலவசமாக  தந்ததில்லை இப்படி இருக்க ஒரு நிறுவனம் தானாக முன்வந்து ஒன்றல்ல இரண்டு மென்பொருட்கள் கெளதம் இன்போடெக்கிறாக ஒரு மாதத்திற்கு www.gouthaminfotech.com படிக்கும் அனைவருக்கும் இலவசமாக தர முன் வந்திருக்கின்றனர்

அந்த ஒன்றில் ஒரு மென்பொருள் ஏற்கனவே இருமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   நமது தளத்தினை படிப்பவர்களுக்கு சட்டரீதியான இலவசமாக அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.  அந்த மென்பொருள் எனது முந்தைய பதிவான சட்டரீதியான நோவா பிடிஎப் மென்பொருள் தான்.  இந்த நோவா பிடிஎப் மென்பொருளை நம் தளத்திற்காக ஒரு மாதத்திற்கு இலவசமாக தர சம்மத்தித்திருக்கின்றனர். 

சென்ற முறை பதிவு செய்தவர்களுக்கும் கட்டாயம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன் Registration Name Gouthaminfotech என்று உங்களுக்கு மெயிலில்  இருக்கும். சென்ற வழிமுறை போலவே தான் இந்த முறையும் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் போதும்.

Nova Pdf Creator Free Licenses Registration Page   -   http://www.novapdf.com/free/gouthaminfotech.html 

Nova Pdf Creator Application Download Page    -  http://www.novapdf.com/en/download.html

இந்த தளத்தின் கீழ் பகுதியில் நம் வலைத்தளத்தின் லோகோ இடம்பெற்றிருக்கும். 


அடுத்து இவர்கள் தர இருக்கும் மென்பொருள்.  பேக்அப் மென்பொருளாகும்  Backup4all Lite உங்கள் கணினியில் உள்ள தேவையான கோப்புகளை பேக் அப் செய்து வைக்கவும் தேவையான பொழுது திரும்ப ரீஸ்டோர் செய்யவும்.  இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்.  அத்துடன் இந்த மென்பொருளில் உள்ளிணைந்த சிடி, டிவிடி பர்னர் இருப்பதால் நேரடியாக பேக் அப் செய்து டிவிடி சேமித்துக் கொள்ளலாம்.  இந்த மென்பொருளின்
மேலதிக தகவலகள் தெரிந்து கொள்ள சுட்டி

Gouthaminfotech என்று உங்களுக்கு மெயிலில்  இருக்கும். சென்ற வழிமுறை போலவே தான் இந்த முறையும் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் போதும்.

Backup4All Lite Free Licenses Download Page -  http://www.backup4all.com/free/gouthaminfotech.html

Backup4All Lite Application Download Page  -  http://www.backup4all.com/en/download.html

இந்த தளத்தின் கீழ் பகுதியிலும் நம் வலைத்தளத்தின் லோகோ இடம்பெற்றிருக்கும்.

இவர்கள் முதன்முதலில் 1999ம் ஆண்டு  Backup4All என்ற மென்பொருளை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.    அந்த மென்பொருளை தொடர்ந்து Nova Pdf மென்பொருளை வெளியிட்டனர்.   இவர்கள் வெளியிட்ட இரண்டு மென்பொருட்களும் பெரிய அளவில் அனைவரையும் சென்றடைந்ததை தொடர்ந்து அனைவருக்கும் தெரிந்த www.fbackup.com மற்றும் www.dopdf.com  போன்ற மென்பொருட்களை தொடர்ந்து www.tinyburner.com டைனிபர்னர் என்ற மென்பொருளையும் உருவாக்கி வெளியிட்டுள்ளனர். 

அத்துடன் http://www.software112.com/ என்ற ஒரு வலைத்தளத்தில் விண்டோஸ், லினக்ஸ், மேக் மற்றும் மொபைல் போன்களுக்கான அப்ளிகேசன்கள் சேமித்து வைத்திருக்கும் ஒரு தளமாக நடத்தி வருகின்றனர்.

இந்த மென்பொருட்களை நம் வலைத்தளத்திற்கு தந்து உதவிய நண்பர் Mr. Claudiu Spulber அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை என் சார்பாகவும் என் வாசகர்கள் சார்பாகவும்  தமிழ் தொழில்நுட்ப வலைத்தளங்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.


இனி நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே மேற்கூறிய இரண்டு மென்பொருட்களையும் நீங்கள் நம் வலைத்தளம் மூலம் சென்று தரவிறக்க வேண்டியது மட்டுமே.   இந்த சலுகை நம் வலைத்தளத்திற்காக ஒரு மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.  புதியதாக வரும் நண்பர்கள் பார்வையாளர்கள் இந்த மென்பொருளை தரவிறக்க வலது பக்கம் தனி விட்ஜெட் பொருத்தப்பட்டு வருகிறாது விரைவில் அது வழியாக தரவிறக்க லின்குகள் கொடுக்கப்படும்.  இது போன்ற நிறைய மென்பொருளை நம் வலைத்தளத்திற்கென்றே கொண்டு வர பல நிறுவனங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.   அவர்கள் எல்லாரும் ஒரு சிறு தொகையாவது எதிர்பார்க்கிறார்கள்.  அதற்கு என்னால் செலவு செய்ய இயலவில்லை உங்களால் முடிந்த உங்கள் சிறு பங்களிப்பை என் வலைத்தளத்தில் தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என் நிலைமையை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.  உங்கள் ஊக்கமே என் உற்சாகம் உங்கள் பின்னூட்டம் இன்னும் புதிய எழுச்சியைக் கொடுக்கும்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை