தீபாவளியை சிறப்பாக கொண்டாட சில டிப்ஸ் மற்றும் மென்பொருட்கள்

நண்பர்களே உங்கள் கணிணியில் உங்கள் கணிணியின் ட்ரைவர்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா?, ஏதும் சந்தேகப்படும்படியான மென்பொருட்கள் நிறுவப்பட்டுள்ளதா?, எந்தெந்த கோப்புகள் உபயோகப்படுத்தப்படுகிறது, இதுமட்டுமில்லை உங்கள் கணிணியின் திறன் மற்றும் வன்பொருள்கள் குறித்த தகவலையும் பெறலாம் ஒரே மென்பொருள் மூலம்.

இந்த மென்பொருளை வடிவமைத்தவர்கள் காஸ்பர்ஸ்கை ஆன்டிவைரஸ் நிறுவனத்தினர்.

இதை எப்படி செய்வது?

இந்த தளத்திலிருந்து இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.

மென்பொருள் தரவிறக்க சுட்டி

மென்பொருளை தரவிறக்கிய பின் நிறுவத் தேவையில்லை நேரடியாக இயக்கலாம். இயக்கியவுடன் கீழிருக்கும் படம் போல உங்களை கேட்கும். உடனே I Agree என்பதனை தேர்வு செய்யுங்கள்.


அதன் பிறகு மென்பொருள் திறக்கப்படும்.

மென்பொருளில் Create Report என்பதனை தேர்வு செய்யுங்கள்.

அனைத்து வேலைகள் முடிந்தவுடன் சுருக்கப்பட்ட (ZIP) கோப்பாக சேமிக்கப்படும்.


பிறகு இந்த தளம் செல்லுங்கள் இணையத்தளசுட்டி


இந்த தளத்தில் Browse என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள். சேமித்த ZIP கோப்பினை தேர்வு செய்யுங்கள். பிறகு Submit என்பதனை தேர்வு செய்யுங்கள். முடிந்தது பிறகு உங்கள் சில விநாடிகளில் உங்கள் கணிணி குறித்த தகவல்கள் சுலபமாக பெறலாம்.





தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாட தீயணைப்புத்துறையின் சில   புகைப்படங்கள்




செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை





முதலுதவி
 

 புகைப்படங்கள் உதவி நன்றி தீயணைப்புத்துறை

பெரியவர்களின் மேற்பார்வையில் குழந்தைகளை பட்டாசுகளை வெடிக்க செய்யுங்கள்.

படடாசு கொளுத்தும்போது இறுக்கமான ஆடைகளை அணியுங்கள்; முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

குழந்தைகளை சட்டைப் பையில் பட்டாசுகளை வைக்க அனுமதிக்காதீர்கள்.

வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்க அனுமதிக்காதீர்கள்.

பட்டாசுகளை வீட்டிற்கு வெளியே வெடிக்கச் செய்யுங்கள்.

ராக்கெட் போன்ற வாண வெடிகளை குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் வெடிக்கச் செய்யுங்கள்.

வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்க அனுமதிக்காதீர்கள்.

பட்டாசு வெடிக்கும் போது ஒருவாளி நீர் எப்போதும் பக்கத்தில் பாதுகா‌ப்பிற்காக இருக்கட்டும்.

நீண்ட வத்திகளை‌க் கொண்டு பட்டாசு வெடிக்கச் செய்யுங்கள். கைக‌ளி‌ல் ‌பிடி‌த்து வெடி‌க்கு‌ம்போது தூ‌க்‌கி எ‌ரியு‌ம் சாகச‌ங்களை செ‌ய்ய வே‌ண்டா‌ம்.

எதிர்பாராத விதமாக உங்கள் மேல் தீ விபத்து ஏற்பட்டால் ஓடாதீர்கள்; உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள்; அல்லது கீழே படுத்து உருளுங்கள்.

தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள்; இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள்; உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்
‌.
ஏதும் அசம்பாவிதம் எனில் தயங்காமல் 101 ஐ அழையுங்கள்.





அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். 


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை