Nov 22, 2011

கணினியின் ஆன் மற்றும் ஆப் செய்த நேரம் தெரிய மற்றும் யூட்யூபின் புதிய இடைமுகப்பு

நண்பர்களே உங்கள் பின்னூட்டமும் உற்சாகமும் எவ்வளவு வேலைகளுக்கிடையிலும் ஒரு பதிவு போட வேண்டும் என்று போட்டு வருகிறேன் இதற்கு உங்கள் உற்சாகமும் வேண்டும் அத்துடன் முடிந்த்வரை படிப்பவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.  முடிந்த்வரை விளம்பரக் கணைகளை தொட்டு பாருங்கள்.  நன்றி  இனி பதிவிற்கு செல்வோம்.

 புதிய யூட்யூப் இன்டெர்பேஸ்

இதுவரை கூகிள் நிறுவனம் தன்னுடைய ஜிமெயில் மற்றும் கூகிள் ரீடருக்கு மட்டும் இடைமுகப்பை (Interface) மாற்றியிருந்தது.  அடுத்ததாக தன்னுடைய வீடியோ தளமான யூட்யூப் தளத்திற்கும் புதிய பொலிவினை வழங்குகிறது.  ஆனால் இது இன்னும் நடைமுறைக்கு வர இன்னும் சிறிது நாட்களாகும் என்று தெரிகிறது.  சில கோடிங் மாற்றத்தின் மூலம் நாமும் அந்த புதிய இடைமுகப்பை பெற முடியும்.  இதற்கு நீங்கள்  உங்கள் கூகிள் மூலம் யூட்ய்பில் நுழைந்து கொள்ளுங்கள்.

பிறகு நீங்கள் பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்கள் என்றால் Ctrl+Shift+K  அழுத்தினால் பயர்பாக்ஸ் மேலே டெவலப்பர்களுக்கான Console Box வரும் அங்கு கீழுள்ள வார்த்தையை காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.  பிறகு ஒரு என்டர் தட்டுங்கள்.  உங்கள் youtube பக்கத்தினை F5  கொடுத்து Refresh செய்து பாருங்கள்.


document.cookie="VISITOR_INFO1_LIVE=ST1Ti53r4fU";
        


இதே நீங்கள் கூகிள் குரோம் உபயோகிப்பவர்கள் என்றால்  Ctrl+Shift+J  கொடுத்து Console Box செல்லலாம்.

உங்களின்  புதிய அனுபவத்திற்கு தயாரகுங்கள்.  

ஒரு குறுஞ்செய்தி

அடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடப் போவது விண்டோஸ் 8 இதில் இலவசமக மைக்ரோசாப்டின் விண்டோஸ் செக்யூரிட்டி எஸ்ஸென்டியல்ஸ் ஆன்டி வைரஸ் இணைத்து வழங்க போவதாக அறிவித்துள்ளது.  இது மைக்ரோசாப்ட் உபயோகிப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த செய்தி ஆன்டிவைரஸ் தயாரித்து வழங்கும் நிறுவனத்திற்கு அதிர்ச்சியான செய்தியும்  ஆகும்.




கீழே Grand Theft Auto V Trailer உங்களுக்காக

Grand Theft Auto என்பது மிகவும் அனைவராலும் விரும்பபடக்கூடிய ஒரு விளையாட்டாக இருக்கிறது.  இதன் ஐந்தாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது.  இந்த விளையாட்டின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.  செம சூப்பராக இருக்கிறது கிராபிக்ஸ்.




கணினி ஆன் மற்றும் ஆப் செய்யப்பட்டது எப்பொழுது

உங்கள் கணினி எந்த நேரத்தில் இருந்து உங்கள் ஆன் மற்றும் ஆப் செய்யப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும்.  இது கடந்த மூன்று வாரங்கள் வரை உங்கள் கணினி எந்த நேரத்தில் ஆன் செய்து வைக்கப்பட்டது எந்த நேரம் உபயோகப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது என்ற தகவல்கள் காட்டும்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி







 நன்றி மீண்டும் வருகிறேன்

9 comments:

  1. ஆன்-ஆஃப் மென்பொருள் எனக்கு ரொம்ப யூஸ்புல் ஆக இருக்கும். பதிவுக்கு நன்றி...

    ReplyDelete
  2. i like gta 5 and wait for release. thanks. trailor super

    ReplyDelete
  3. மிக உபயோகமுள்ளதாக இருக்கு
    நன்றி

    ReplyDelete
  4. very useful information. thank vadivelan sir..!!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  6. நன்றி நண்பரே..

    எங்களுக்கு உதவிட விரும்பும்
    உங்கள் முயற்சிகள் ஒன்வொன்றிக்கும்

    நன்றிகள்..நன்றிகள்..

    ReplyDelete
  7. ஆன்-ஆப் மிகவும் பயனுள்ள சாப்ட்வேர்.. நான் BSNL பிராட்பேண்ட் உபயோகிக்கிறேன்.. அதன் ஆன் ஆப் டைம் பார்க்க வழியிருந்தால் சொல்லவும்... நன்றி

    ReplyDelete
  8. "மென்புத்தகங்கள் தரவிறக்கம்" பதிவு மிக சிறப்பாக மற்றும் பயனுள்ளதாக இருந்தது.. இது போன்று மேலும் சில வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..

    உங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    நன்றி...

    ReplyDelete
  9. Usefull tips..visit dailysharetips.com for recent tips and info

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்