Mar 23, 2010
இலவச பிடிஎப் 2 டெக்ஸ்ட் மாற்று மென்பொருள் & டிப்ஸ்கள்
நண்பர்களே நமக்கு தேவையான வலை உலாவிகளை தரவிறக்க நேரடியாக அந்த தளத்திற்கு சென்று அங்கு டவுண்லோடு பிரிவிக்கு சென்ற பிறகே தரவிறக்க முடியும்.
ஆனால் இந்த தளத்தில் நேரடியாக புதிய பதிப்புகளின் வலை உலாவிகள் கிடைக்கிறது. உலக அளவில் பிரசித்தி பெற்ற பத்துக்கும் மேற்பட்ட வலை உலாவிகள் உள்ளது.
இணையத்தள சுட்டி
கூகிள் குரோம் பிரவுஸரில் நேரம் மற்றும் தேதி மிக தெளிவாக பெரியதாக பார்க்க இந்த நீட்சியை நிறுவவும். சுட்டி
ஒவ்வொரு முறை நெருப்பு நரி உலாவியில் புதிய டேப் உருவாக்கும் போது தானாக புதிய டேப் செல்ல கீழுள்ள முறையை பின்பற்றவும்.
நெருப்பு நரி உலாவியில் Tool கிளிக் செய்து அதில் Options தேர்வு செய்து Tab கிளிக் செய்யவும்.
When I open a link in a new tab, switch to it immediately
இந்த வரிக்கு நேராக உள்ள பெட்டியில் டிக் செய்யவும். முடிந்தது எப்பொழுதும் போல OK கொடுத்து வெளியில் செல்லவும். இனி புதிய டேபுகள் உருவாக்கும் பொழுது தானாக புதிய டேபுக்கு சென்று விடும்.
உங்களிடம் மிகப்பெரிய பிடிஎப் கோப்புகள் இருப்பின் அதை டெக்ஸ்டாக மாற்ற இந்த மென்பொருள் உதவும். மென்பொருள் சுட்டி
நெருப்பு நரி உலாவி உபயோகிப்பவர்கள் வயதானவர்கள் மற்றும் கண் குறைபாடு உள்ளவர்கள் உபயோகிக்கும் போது அட்ரஸ் பார் சிறியதாக இருக்கும் அவர்களால் சரியாக தட்டச்சு செய்ய இயலாது. இதே அந்த பார் பெரியதாக இருந்தால் தட்டச்சு செய்ய இலகுவாக இருக்கும். இதற்கு இந்த ஆடு ஆன் உதவும். ஆடு ஆன் சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்
Dear Vadivelan,
ReplyDeleteGood informations, thanks a lot for pdf to text relly its very nice. Good job, keep it up.
Well done.
Best wishes
Muthu Kumar.N
இந்த முறை நிறைய தகவல்கள், நன்றி.
ReplyDelete