Feb 12, 2010

கூகிள் பஸ்ஸிற்கான நீட்சி மற்றும் மென்பொருட்கள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே நம் கணிணியில் ஒரே மாதிரி கோப்புகள் நிறைய இருக்கும் உதாரணத்திற்கு ஒரு புகைப்படம் அதில் உள்ள பிக்ஸல் மற்றும் அளவு போன்றவை ஒன்றாக ஒன்று சி ட்ரைவிலும் இன்னொன்று மை டாக்குமென்ட்சிலும் இருந்தால் நம்மால் கண்டுபிடிக்க முடியாது இது போன்று ஏராளமான கோப்புகள் நாம் இரண்டு இடத்தில் சேமித்து வைத்திருப்போம் இதனால் வன்தட்டில் இடம்தான் அடைத்துக் கொள்ளுமே தவிர வேறு உபயோகம் இல்லை இது போன்று அனைத்து கோப்புகளையும் கண்டுபிடிக்க இந்த மென்பொருள் உங்களுக்காக சுட்டி இதன் சிறப்பம்சங்கள் இதன் மூலம தேவையில்லாத கோப்பை நீக்கலாம். ஒரு குறிப்பிட்ட டிஸ்க் அல்லது போல்டருக்குள் தேட முடியும்.
 கூகிள் நிறுவனத்தின் புதிய செயலி கூகிள் பஸ் (buzz) இதனுடைய சிறப்பம்சம் இது ஜிமெயில் உள்ளேயே இணைந்து இருப்பது சிறப்பாக இருக்கிறது.  நீங்கள் உங்கள் ட்விட்டரில் ட்விட் செய்தால் இங்கும் தெரியுமாறு அமைக்கலாம்.  இந்த செயலி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கூட நிறுத்தி வைக்க முடியும்.  உங்கள் ஜிமெயில் கணக்கினை திறந்து நேரே கீழே சென்றால் அங்கு Turn off buzz என்று ஒரு லின்க் அதை அழுத்துங்கள் முடிந்தது. வேண்டும் என்றால் அதை மறுபடி அழுத்தினால் போதும். 


இதற்கான பயர்பாக்ஸ் உலாவி நீட்சி வெளிவந்துள்ளது அதை தரவிறக்க இங்கு செல்லுங்கள் சுட்டி


கூகிள் குரோமிற்கான நீட்சி தரவிறக்க சுட்டி


மிக சிறந்த வலை உலாவிகளில் ஒபராவிற்கு என்று ஒரு இடம் உண்டு.  அந்த பிரவுசரில் ஒரு ஒன்பது கட்டங்கள் கொண்ட டேப் இருக்கும். அதில் நம் விரும்பும் இணையத்தளங்களின் பெயர்களை இட்டுக் கொள்ளலாம்.  அது நம் கணிணியில் மட்டுமே செயல்படும் வகையில் இருந்தது. இப்பொழுது அவர்கள் ஒரு தளம் தந்திருக்கிறார்கள் அதன் மூலம் அங்கு நம் ஒரு கணக்கினை திறந்து விட்டால் போதும் எங்கு சென்றால் நேரடியாக நம் தளத்தை அணுகலாம். ஒரு தடவை நீங்கள் கணக்கினை திறந்து விட்டால் அங்கு என்ன யூசர் நேம் கொடுத்திர்களோ அதனுடன் homepagestartup.com என்று சேர்த்தால் போதும்.  இனி உங்களுக்கு பிடித்த புக்மார்க்குகளை எங்கிருந்தாலும் அணுகலாம்.  உங்கள் நண்பர்களுடன் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.

http://.homepagestartup.com

இணையத்தள சுட்டி


மைக்ரோசாப்டிற்கு நிகரான திறந்த நிலை இலவச ஒபன் ஆபிஸ் 3.2 புதிய பதிப்பு வெளிவந்துள்ளது அதனை தரவிறக்க இங்கு செல்லுங்கள் சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்

3 comments:

  1. மிக்க நன்றி தகவல்களுக்கு.

    ReplyDelete
  2. நமக்கு அவசியமான மென்பொருள்களில் இதுவும் ஒன்று. வெளியிட்டதற்கு நன்றி

    ReplyDelete
  3. in your title " kanini " spelled wrongly. Please set it right.

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்