Dec 24, 2009

இலவசமான சட்டரீதியான ஒரு வருடத்திற்கான டிஸ்க் கீளினர் மென்பொருள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி


நண்பர்களே உங்கள் கணிணி திரையை கிறிஸ்துமஸ் கால கணிணி திரையாக ஆக்க இந்த மென்பொருள் மூலம் உதவும்.  இந்த மென்பொருள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் 2004 ஆம் ஆண்டு உருவாக்கி வெளியிடப்பட்டது. உபயோகித்து பாருங்கள் மென்பொருள் தரவிறக்க சுட்டி குறிப்பு : இதை தரவிறக்க உங்கள் கணிணியில் நிறுவி உள்ள விண்டோஸ்  உண்மையானதாக இருக்க வேண்டும்

உங்கள் கணிணியில் உள்ள தேவையில்லத தற்காலிக கோப்புகள் மற்றும் இணையதள நடவடிக்கைகளை நீக்க நீங்கள் சிசி கீளீனர் என்ற மென்பொருளை உபயோகித்திருப்பீர்கள்.  அந்த மென்பொருள் போன்றது இந்த மென்பொருள் ஆனால் அதை விட மிகவும் திறமையான வேகமான மென்பொருள் இதன் மூலம் நீக்க முடியாத தற்காலிக கோப்புகளை மற்றும் இணையத்தளத்தில் உலா வரும்போது நாம் பார்த்த இணையத்தளங்கள் அதனுடன் சேர்ந்த வீடியோ ஆடியோ கோப்புகள் அனைத்தையும் அழிக்க வல்லது இந்த மென்பொருள் ஜனவரி 31 2010 வரை சாப்ட்பீடியா என்ற நிறுவனத்திற்காக இலவசமாக தரப்படுகிறது இந்த மென்பொருளை தரவிறக்க எளிய வழி கீழே கொடுத்துள்ளேன் இந்த அரிய வாய்ப்பினை அனைவரும் உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.




இங்கு சுட்டி சென்று உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் உங்கள் முகவரிக்கு உங்களுக்குரிய ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைப்பார்கள்.

அந்த மின்னஞ்சலில் லைசென்ஸ் பெறுவதற்காக அவர்கள் தளத்திற்கு ஒரு லின்க் கொடுத்திருப்பார்கள்.  

அதை கிளிக் செய்யுங்கள் அவர்கள் தளத்திற்கு இட்டு செல்லும்.

அங்கு கீழே Free Get Key என்று இருக்கும் அதை தேர்வு செய்யுங்கள். 

இப்பொழுது உங்கள் Key உங்களுக்கு காண கிடைக்கும். 

அதற்கு கீழே மென்பொருளின் தரவிறக்க லின்க் கொடுத்திருப்பார்கள் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஊக்கமே எனக்கான ஊட்டச்சத்து நான் வெளியிடும் மென்பொருட்கள் எனது வலைப்பூ குறித்த உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டுகிறேன்.

இயேசு கிறிஸ்து பிறந்த நாளான நாளை கொண்டாடும் வகையில் அனைவரும்  அனைவரிடமும் அன்பு செலுத்துவோம். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.




நன்றி மீண்டும் வருகிறேன்

4 comments:

  1. அன்பின் நண்பருக்கு,

    உங்கள் பதிவுகளனைத்துமே மிகப் பயனுள்ளவை. எனது வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் சேவையை.

    ReplyDelete
  2. நன்றி வேலன். தரவிறக்கம் செய்து நிறுவி விட்டேன்.

    ReplyDelete
  3. நன்றி வேலன்,
    திஸ் ஈஸ் மோர் எஃபக்ட்டிவ் தான் சிசி கிளீனர்.
    ஆனால் ஒவ்வொரு முறையும் திறக்கும்போது ,இட்ஸ் ஆஸ்கிங்க் ஃப்ஆர் கீ.

    ReplyDelete
  4. மின்னுது மின்னல்December 26, 2009 at 9:59 AM

    // ஒரு வருடத்திற்கான//


    //ஜனவரி 31 2010 வரை//

    ????

    ReplyDelete

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்