நண்பர்களே எத்தனை ஞாபகங்கள் இருந்தாலும் முக்கிய வேலைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள நாம் திணறிக் கொண்டிருக்கு வேலையில் Remainder என்ற ஒரு கருவி வந்து நாம் வேலைகளை நினைவில் வைத்துக் கொண்டு நமக்கு திரும்ப நினைவூட்ட உதவியது. ஆனால் இந்த Remainder என்ற ஒன்று செல்பேசி வந்தவுடன்தான் அது கூடவே வந்தது என்றதாக நினைவு (தவறாக இருந்தால் பின்னூட்டம் இடவும்). இப்பொழுது இருக்கும் அனைவரும் வீட்டினுள் கணணி வெளியில் சென்றால் செல்பேசி இல்லாமல் இருப்பதில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த இரண்டு ஊடகம் வழியாக நமக்கு நினைவூட்ட ஒரு தளம் இருந்தால் எப்படி இருக்குமோ என்று நினைப்பவர்களுக்காக இந்த் தளம் செயல்படுகிறது.
Superminder பெயரைப் போலவே சூப்பராக செயல்படுகிறது. இந்த தளத்தில் உங்களுக்கென்று ஒரு கணக்கை உருவாக்கிய பின் செட்டிங்க்ஸ் சென்று உங்கள் மெயில் முகவரி கொடுத்து Veryfied செய்து கொள்ளுங்கள். அது போலவே உங்கள் செல்பேசி எண்ணுடன் உங்கள் நாட்டின் கோடை கொடுத்து (உதராணம் நீங்கள் இந்தியாவில் இருந்தால் +919123456789 இதில் +91 என்பது இந்தியாவிற்கான தொலைபேசி கோடு.) உங்கள் கணக்கை Veryfied செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்குத் தேவையான நினைவூட்டலை புதியதாக எழுதிவிட்டு எந்த நேரத்துக்கு நினைவூட்ட வேண்டும் என்றும் மின்னஞ்சல் அல்லது செல்பேசி எதன் வழியாக நினைவூட்ட வேண்டும் என்று தேர்வு செய்து சேவ் செய்து வெளியேறுங்கள். நீங்கள் செட் செய்த நேரத்திற்கு உங்கள் செல்பேசி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு டெலிவரி செய்து நினைவூட்டி விடும்.
இத்தளத்தின் சுட்டி
விண்டோஸ் 7 சூப்பர் வால்பேப்பர்கள் உங்களுக்காக சுட்டி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. அவர் பெயரில் அவருடைய ரசிகர்கள் ரத்ததானம் செய்கிறார்கள். இது ஒன்றும் புதிதில்லை என்று சொல்லலாம். இந்த் விஷயத்தில் புதியது என்னவென்றால் அதற்கென்று தனி வலைத்தளம் உருவாக்கி அதில் உங்களுக்கு எங்கு ரத்தம் தேவையோ அந்த ஊரில் உள்ள ரத்ததானம் செய்யும் நபரின் பெயர், விலாசம், மெயில் முகவரி, செல்பேசி எண் இவை அனைத்தையும் சேகரித்து Database உருவாக்கி வைத்தள்ளனர். ரத்ததானம் வலைத்தளம் மூலம் ரஜினி மட்டும் சூப்பர்ஸ்டார் அல்ல ரஜினியின் ரசிகர்களும் சூப்பர்ஸ்டார்களாக மாறிவிட்டார்கள். வலைத்தள சுட்டி
நாளை எனக்கு ஐந்தாவது திருமண நாள் (17-06-2009) உங்கள் வாழ்த்துக்கள் மற்றும் பெரியவர்கள் ஆசிர்வாதங்கள் மட்டுமே எங்களை நலமுடன் இணைந்து வாழவைக்கும். வாழ்த்துங்கள் வளர்கிறோம்.
உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் ஒட்டை தமிலிசில் குத்துங்கள். விளம்பரங்களை கிளிக் செய்யுங்கள்
நன்றி மீண்டும் வருகிறேன்
வாழ்த்துகள்.. நண்பரே..!! :) :)
ReplyDeleteநன்றி ஹாலிவுட் பாலா அவர்களுக்கு நீங்கள் வருகைதந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி
ReplyDelete//நாளை எனக்கு ஐந்தாவது திருமண நாள் (17-06-2009) உங்கள் வாழ்த்துக்கள் மற்றும் பெரியவர்கள் ஆசிர்வாதங்கள் மட்டுமே எங்களை நலமுடன் இணைந்து வாழவைக்கும். வாழ்த்துங்கள் வளர்கிறோம்.//
ReplyDeleteவாழ்த்துக்கள்
வடிவேலன்,
ReplyDeleteஉங்களின் ஐந்தாவது திருமண நாளிற்கு என் உள்ளம் கனிந்த மகிழ்ச்சி மிகுந்த மணநாளிற்கான வாழ்த்துகள் மகிழ்ச்சியுடன்....
வாழ்க வளமுடன் இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியுடன்.
வழக்கம் போல அருமையான
தகவல்களுடன் நல்ல பதிவு.
Windows 7 Theme Pack very nice.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
Best wishes.
ReplyDeleteAarveeyar
From Vellore
உங்களின் ஐந்தாவது திருமண நாளிற்கு என் உள்ளம் கனிந்த மகிழ்ச்சி மிகுந்த மணநாளிற்கான வாழ்த்துகள் மகிழ்ச்சியுடன்....
ReplyDeleteவாழ்க வளமுடன் இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியுடன்.
உங்களின் ஐந்தாவது திருமண நாளிற்கு என் உள்ளம் கனிந்த மகிழ்ச்சி மிகுந்த மணநாளிற்கான வாழ்த்துகள் மகிழ்ச்சியுடன்....
ReplyDeleteவாழ்க வளமுடன் இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியுடன்.
vadivelsamy
I came to your Blog after a long time and noted your Wedding Anniversary.
ReplyDeleteClick the URL. http://img.123greetings.com/eventsnew/anniv_belated/10226-034-20-1270.gif
with best wishes,
R Sundhar Raman