நண்பர்களே சில நாட்கள் என்மகனுக்கு எனக்கும் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் பதிவுகள் தொடர்ந்து எழுத முடியவில்லை இது கூட அலுவலகத்தில் சிறிது வேலை இருக்கிறது என்று அழைத்தார்கள் அந்த கிடைத்த நேரத்தில் இந்த பதிவு எழுதுகிறேன்.
நாம் பாடல்கள் கேட்பதாக இருந்தால் நம் அனைவரது மனம் நிச்சயம் நாடுவது விண்ஆம்ப் ப்ளேயராகதான் இருக்கும். ஆனால் பாடல்கள் ஒலிக்கும் போது வரிகள் தோன்றுமா தோன்றாது. பாடல்கள் ஒலிக்கும்போது வரிகள் தோன்ற இந்த மென்பொருளை உபயோகிக்கலாம்.
இந்த மென்பொருள் விண்ஆம்ப் மட்டுமல்ல மீடியா ப்ளேயருக்கும் கொடுக்கிறார்கள் இலவசமாக . இந்த மென்பொருள் நிறுவிய பிறகு நீங்கள் இயக்கும் பாடல் வரிகள் இணையத்தில் தேடி கொடுக்கும். அப்படி இல்லையென்றால் நீங்களாகவே பாடல் வரிகளை தரவேற்றலாம்.
பாடல் வரிகள் காட்டும் மென்பொருள் சுட்டி
தமிழ் பாடல் வரிகளுக்கு இந்த சுட்டி
இந்த தளத்தில் ஆயிரக்கணக்கான பாடல் வரிகள் உள்ளன.
பாடல் வரிகளை எடுத்து பயன்பெறுங்கள் அந்த தளத்திற்கு உங்கள் பாரட்டையும் தெரிவியுங்கள்.
நன்றி மீண்டும் வருகிறேன்
வடிவேலன்,
ReplyDeleteநல்ல பதிவு, நல்ல தகவல்.
நீங்கள் மற்றும் உங்கள் மகன் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களின் பர்சனல் இமெயில் முகவரி இருந்தால் எனக்கு அனுப்ப முடிந்தால் அனுப்பவும்.
muthukumar2311@gmail.com
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
விரைவில் உடல் நலம்பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்னலான நேரத்திலும் இடுகையிட்டமைக்கு இன்னும் பல நன்றிகள்.
\\என்மகனுக்கு எனக்கும் உடல் நலம் சரியில்லாத காரணத்தால்\\
ReplyDeleteஉடல் நலம் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
என்ன காரணம் என கண்டறிந்து சரி செய்யுங்கள்
மீண்டும் வாழ்த்துக்கள்
அன்பின் நண்பரே
ReplyDeleteநீங்களும் ,மகனும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
தரமான பதிவுகளை தந்து வரும் உங்களுக்கு எனது நன்றிகள்,வாழ்த்துக்கள்
நன்றி அனைவருடைய பிரார்த்தனையின் பேரில் எனக்கும் என்மகனுக்கும் உடல்நலம் பூரண குணமடைந்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
ReplyDeleteஅட இப்படியெல்லாம் வசதியுண்டா??
ReplyDeleteநன்றி