இலவசமாக ஒரு போட்டோஷாப் மென்பொருள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 400க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி 


நண்பர்களே புதிய குரோமெ 5 பீட்டா பதிப்பு வெளிவந்திருக்கிறது அதை தரவிறக்க இங்கே செல்லுங்கள் புதிய பீட்டா பதிப்பில் தேவையில்லாத ப்ளக் இன்ஸ் (Plug ins) களை நிறுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது.  அதை செய்ய உங்களிடம் புதிய குரோம் 5 பீட்டா பதிப்பு நிறுவி இருக்க வேண்டு. 

முதலில் உங்கள் குரோம் வலை உலாவியில் அட்ரஸ் பாரில் about:plugins என்று டைப் செய்து என்டர் தட்டவும்.



இப்பொழுது உங்கள் குரோம் பிரவுசரில் நிறுவி உள்ள அனைத்து பிளக் இன்களும் காட்டப்படும்.  அனைத்து பிளக் இன்களுக்கும் கீழே Disabled என்ற பட்டந் இருக்கும் அதை கிளிக் செய்வதுன் மூலம் நிறுத்தி வைக்கலாம். வேண்டும் என்கிற பொழுது இதே போல சென்று Enabled செய்து கொள்ளுங்கள்.


நிறைய நண்பர்கள் போட்டோஷாப் கற்றுக் கொள்வதற்கு சிரமமாக இருக்கிறது என்கிறார்கள்.  இதை நிறைய பணம் கொடுத்து வாங்க வேண்டியுள்ளது எனவும் இதனால் போட்டோஷாப்பிற்கு பதில் வேறு ஏதும் மென்பொருள் இருக்கிறதா போட்டோஷாப் வேலைகள் அனைத்தும் செய்ய  என்று கேட்கிறார்கள் அவர்களுக்காக ஒரு இலவச போட்டோஷாப் போன்ற ஒரு மென்பொருள்  இதன் பெயர் ஜோனர் போட்டோ ஸ்டூடியோ.

இந்த மென்பொருள் மூலம் செய்யக்கூடிய வேலைகள் சிலவற்றை பட்டியலிடுகிறேன்.

டேப் முறையில் படங்களை பார்க்கலாம்.

உங்கள் புகைப்படங்கள் எந்த ஒரு வன்பொருளிலிருந்தும் நேரடியாக இறக்கிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு டிஜிட்டல் கேமாரவில் இருந்து நேரடியாக இந்த மென்பொருள் மூலம் படங்களை இறக்கி எடிட் செய்யலாம்.

உங்கள் போட்டோவில் Exif மற்றும் Meta டேட்டாக்களை எடிட் செய்யலாம்.

கூகிள் எர்த்திற்கு GPS கோப்பாக Import மற்றும் Export செய்ய முடியும்.

தேடு பொறி மிகவும் புகைப்படங்களை வேகமாக தேடி தரும்.

White Balance மற்றும் Satuaration போன்றவற்றை அட்ஜஸ்ட் செய்ய முடியும்.

ரெட் ஐ மற்றும் கிளோன் ஸ்டாம் உபயோகபடுத்த முடியும் இந்த மென்பொருளில்.

போட்டோ கோப்புகளை வேறு வகை கோப்பாக மாற்றிக் கொள்ளலாம்.

நீங்கள் எடிட் செய்த போட்டோக்களை பிளிக்கர் மற்றும் பேஸ்புக் தளங்களுக்கு நேரடியாக தரவேற்றலாம்.


விதவிதமான காலண்டரில் உங்களுக்கு பிடித்த  புகைப்படங்கள் அலல்து உங்கள் குடும்ப புகைப்படங்களை இணைக்கலாம்.

பழைய புகைப்படங்களை புதிய புகைப்படங்களாக மாற்றலாம்.


இதனுடன் ஒரு உதவிக் கையேடும் உள்ளது.

மென்பொருள் தரவிறக்கச் சுட்டி

இது விண்டோஸ் எக்ஸ்பி/விஸ்டா/7 (32Bit / 64 Bit) போன்றவற்றில் மட்டுமே இயங்கும்.  விண்டோஸ் 2000ல் இயங்காது.

குறைந்தபட்சம் 512எம்பி நினைவகம் வேண்டும்

ப்ரோஸஸர் 300 MHZ குறைந்தபட்சம் இருக்க வேண்டும்


நம் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு நண்பர் சைவகொத்துபரோட்டா அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி சைவகொத்துபரோட்டா அவர்களுக்கும் வலைச்சரத்தின் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி   அந்த பதிவின் சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை