அனைத்துவித தளங்களில் இருந்தும் வேகமாக வீடியோக்கள் தரவிறக்க

நண்பர்களே நாம் நிறைய வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகள் மற்றும் புத்தகங்களை தரவிறக்கம் செய்வோம்.

 எந்த மாதிரி தளத்தில் செய்வோம் என்றால் Bittorent, Rapidshare, Megaupload, MediaFire, Hotfile, Netload.in, FIlesonic, Easy-share, Megashare, மற்றும் Fileserve போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்வோம்.  இதில் உள்ள அனைத்திலும் ஒரு பிரச்சனை நேரம் மற்றும் தரவிறக்கும் வேகம் தான்.  ஒரு தளங்களில் ஒரு கோப்பினை தரவிறக்கம் செய்ய முயற்சி செய்தால் முதலில் தரவிறக்க 60 விநாடிகள் வரை காத்திருக்க வேண்டும்.  அதன் பிறகு தரவிறக்கம் செய்ய வேண்டும்.  அது மட்டுமல்லாமல் தரவிறக்க வேகம் மிகவும் குறைவாகவும் இருக்கும். 

இதை தீர்க்க ஒரு இலவச தளம் உள்ளது.  அதன் பெயர் fetch.io  இது ஒரு Cloud Computing முறையில் இயங்ககூடிய தளம்.

இந்த வலைத்தளம் மூலம் Bittorent, Rapidshare, Megaupload, MediaFire, Hotfile, Netload.in, FIlesonic, Easy-share, Megashare, மற்றும் Fileserve போன்ற தளங்களில் நேரக் காத்திருப்பு இல்லாமல் தரவிறக்க முடியும்.


இதில் ஒரே நேரத்தில் பலதரப்பட்ட தளங்களிலுருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.

தரவிறக்கப்படும் வீடியோ கோப்புகள் நேரடியாக MP4 ஆக மாற்றி தரும்.



இந்த வலைத்தளத்தில் மூலம் நான் பத்து எம்பி உள்ள வீடியோ கோப்புகள் ஓரு மூன்று விநாடிகளுக்குள் தரவிறக்கித்தந்தது.

இணையத்தள சுட்டி



நண்பர்களே  இதுவரை நம்முடைய வலைத்தளத்தின் பெயரை தன்னுடைய வலைத்தளத்தின் டாப் டென்னில் இடம்பெறச் செய்த நண்பரும் பதிவருமான திரு. பிரபு என்கிற சாய்தாசன் அவர்களுக்கு எனது நன்றி

இனி நமது வலைத்தளத்தின் சுட்டிகள் அவருடைய டாப் டென்னில் வெளிவராது.

ஏன் வெளிவராது என்று கேட்பவர்களுக்கான பதில் இதற்கு முன் இட்ட பதிவான  பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்க மற்றும் வைபை வாட்சர் உங்களுக்காக என்ற பதிவினை நீக்கினால் மட்டுமே நம் பதிவுகள் வெளிவரும் என்று கூறிவிட்டார்.   எனக்காக நிறைய உதவிகள் செய்தவர் அதுமட்டுமல்லாமல் நிறைய அறிவுரைகள் கூறியவர் இருந்தாலும் இதற்கான பதிலை நான் வாசகர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.  இந்த பதிவினை நீக்கலாமா வேண்டாம் என்று நீங்களே கூறுங்கள்.  எனக்கு குழப்பமான மனநிலையில் இருக்கிறேன்.  வாசகர்களுடைய உதவியினை எதிர்பார்க்கிறேன். 

வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க அந்த குறிப்பிட்ட பதிவில் சில பிடிஎப் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்கும் முறையை நீக்கி விட்டேன்.  தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்.
 

நன்றி  மீண்டும் வருகிறேன்

» Read More...

உங்கள் கோப்புகளை முழுமையாக நீக்க மற்றும் வலை முகவரி சுருக்கிகள் மூன்று உங்களுக்காக

நண்பர்களே நாம் நம்முடைய முக்கியமான தகவல்கள் அடங்கிய கோப்புகள் அல்லது தேவையில்லாத கோப்புகளில் Del கீ கொண்டு நீக்குவோம்.  அல்லது Shift+Del கீ கொண்டு நீக்குவோம்.  வெறும் Del கீ கொண்டு நீக்கினால் Recycle Bin பகுதிக்கு சென்று விடும் அங்கிருந்து நாம் மீட்டுக் கொள்ளலாம்.  அதே Shift+Del கொண்டு நீக்கினால் Restoration என்ற மென்பொருள் கொண்டு மீட்டெடுக்கலாம்.   இது போன்ற மென்பொருட்களை கொண்டு மீட்டெடுத்தால் யார் வேண்டுமானாலும் நம் கோப்புகளை திருட்டுதனமாக மீட்டெடுத்து உபயோகிக்கலாம்.  அப்படி செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் Eraser என்ற மென்பொருளை கொண்டு நீக்கினால் அந்த கோப்புகள் யார் கைக்கும் கிடைக்காத வண்ணம் வன்தட்டிலிருந்து மிகவும் பாதுகாப்பாக நீக்கிவிடலாம். 

இந்த மென்பொருள்  அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையில் உபயோகிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பான மென்பொருள் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருள் ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருளும் கூட

இந்த மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ், மற்றும் மேக் கணினிகளில் பயன்படுத்தும் வண்ணம் தனி தனி மென்பொருளாக கிடைக்கிறது.

இந்த மென்பொருளை கடந்தா வாரம் மட்டும் 30000க்கும் மேற்பட்டவர்கள் தரவிறக்கி உபயோகித்து நன்றாக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த மென்பொருள் வெளிவந்த வருடம் 2006

Eraser 6.0.8.2273 இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி


 விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் அனைவருக்கும் ஒரு பிரச்சனை வரும் அந்த பிரச்சனை என்னவென்றால் விண்டோஸ் எக்ஸ்பியில் உள்ளது போல Start மெனு இல்லாததே பிரச்சனை.  இதை தீர்ப்பதற்கு ஒரு மென்பொருள் உள்ளது அதுதான் Start Menu XP இந்த மென்பொருளை நிறுவி உங்களுக்கு ஸ்டார்ட் பாருக்கு ஏற்றவாறு குரூப்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி
பெரிய பெரிய வலை முகவரிகளை சிறியதாக மாற்ற நாம் bit.ly, goo.gl, is.gd,mcaf.ee போன்ற வலைத்தளங்களுக்கு சென்று பெரிய வலை முகவரிகளை சிறிய முகவரியாக மாற்றி மின்னஞ்சல் செய்வோம். 
அது போல செய்ய ஒவ்வொரு தளத்திற்கும் செல்லாமல் நம் வலை உலாவியிலிருந்து செய்ய சிறு மென்பொருட்கள் உள்ளது.  அதை நிறுவினால் போதும்.

பயர்பாக்ஸ் Firefox உலாவியில் நிறுவ நீட்சி சுட்டி இது கூகிள், மெக்காபி, மற்றும் பிட் லி போன்ற வலைத்தளங்கள் செல்லாமல் வலை முகவரிகளை சுருக்கலாம்.
 
பிட் லி வலை முகவரி சுருக்கி மென்பொருள் 
பயர்பாக்ஸ் Firefox  வலை உலாவியில் நிறுவ நீட்சி சுட்டி

கூகிள் குரோம் வலை உலாவியில் பிட்லி வலை முகவரி சுருக்கி நீட்சி சுட்டி 
இந்த நீட்சிகள் இரண்டும் பிட்லி வலைத்தளத்தை மட்டுமே  கொண்டு செயல்படுகிறது.
கூகிள் வலை முகவரி சுருக்கி நீட்சி குரோம் வலை உலாவியில் மட்டுமே செயல்படும். கூகிள் குரோமிற்கான நீட்சி சுட்டி

ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்.



நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

75 வகையான கோப்புகளை கையாளும் ஒரே மென்பொருள் உங்களுக்காக

நண்பர்களே ஒரு டாக்குமென்ட் கோப்பினை எடுத்துக் கொண்டால் அந்த கோப்பினை வெறும் படிக்க மட்டும் அனைத்து மென்பொருளையும் நிறுவ வேண்டும்.  அதே போல் தான் ஒரு வீடியோ கோப்போ அல்லது ஆடியோ கோப்போ இருந்தாலும். தனித்தனி மென்பொருட்கள் நிறுவ வேண்டும்.  அப்படி ஒவ்வொரு மென்பொருள் நிறுவும் பொழுது ஒவ்வொரு மென்பொருளும் தனித்தனியாக செயல்படும் பொழுது கண்ணினியின் வேகம் மிகவும் குறைந்து விடுகிறது. 

இது மட்டுமல்லாமல் கணினியின் உள்ள வன்தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு இன்னும் அதிகமாக கணினியின் வேகம் இன்னும் குறைகிறது.   நாம் இது போல் இந்த கோப்புகளை எல்லாம் படிக்க மட்டும் என்றால் அல்லது வியூ மட்டும் செய்வதாக இருந்தால் அதற்கு ஒரு மென்பொருள் உள்ளது இதன் பெயர் ப்ரீ ஒபனர் ( சோடா ஒபனர் போல!!) Free Opener.


ஆதரிக்கும் கோப்பின் வகைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.  இது மொத்தம் 75க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆதரிக்கிறது. 



©      சோர்ஸ் கோடுகள்   -Code Files (.c, .cs, .java, .js, .php, .sql, .vb)
©      வெப் பக்கங்கள்   - Web Pages (.htm, .html)
©      போட்டோஷாப் கோப்புகள் - Photoshop Documents (.psd)
©      புகைப்படங்கள்  -  Images (.bmp, .gif, .jpg, .jpeg, .tiff)
©      எக்ஸ்எம்எல் கோப்புகள்  -  XML Files (.resx, .xml)
©      பவர் பாயிண்ட் கோப்புகள்  -   PowerPoint® Presentations (.ppt, .pptx)
©      வீடியோ கோப்புகள்  -  Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv)
©      மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பு கோப்புகள்  -  Microsoft® Word Documents (.doc, .docx)
©      7ஜிப் வகை -  7z Archives (.7z
©      சப்டைட்டில் கோப்புகள்  -  SRT Subtitles (.srt)
©      ரா இமேஜஸ்  -  RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)
©      ஐகான்கள்   -  Icons (.ico)
©      எக்எஸ்எம்எல் பேப்பர் கோப்புகள் - Open XML Paper (.xps)
©      டொரென்ட்கள் -  Torrent (.torrent)
©      ப்ளாஷ் கோப்புகள் -  Flash Animation (.swf)
©      ஜிப் வகைகள் - Archives (.jar, .zip)
©      ரிச் டெக்ஸ்ட் கோப்புகள்  -  Rich Text Format (.rtf)
©      டெக்ஸ்ட் கோப்புகள்  -  Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)
©      ஆப்பிள் பேஜஸ்  -  Apple Pages (.pages)
©      எக்ஸல் கோப்புகள்  -  Microsoft® Excel Documents (.xls, .xlsm, .xlsx)
©      சிஎஸ்வி கோப்புகள்  -  Comma-Delimited (.csv)
©      அவுட்லுக் மெஸேஜ்கள் -  Outlook Messages (.msg)
©      பிடிஎப் கோப்புகள்  -  PDF Documents (.pdf)
©      விகார்டு கோப்புகள்  -  vCard Files (.vcf)





 








































































இந்தமென்பொருளை தரவிறக்க சுட்டி

button_405.png



ஒரு அறிவிப்பு 

இந்த வலைத்தளம் மூலம் எனக்கு எதுவும் எந்த ஆதாயமும் கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பல பதிவுகளை  கஷ்டப்பட்டு தான் இந்த பதிவுகளை எழுதுகிறேன்.  அதனால் நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகமானவை என்றே நம்புகிறேன்.  இவ்வாறிருக்கையில் வரும் நண்பர்கள் என் வலைத்தளத்தில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் என்னால் மாதம் ஒரு சிறு தொகையை ஈட்ட முடியும் என்று நம்புகிறேன்.  ஆகையால் பதிவுகளை படிக்கும் நண்பர்கள் விளம்பரங்களை கிளிக் செய்து வருவாயை ஈட்ட உதவி செய்ய வேண்டுகிறேன். உதவுங்கள் இன்னும் தரமான ஆக்கங்களை உருவாக்க உதவுங்கள்.  அத்துடன் இந்த பதிவுகள் தரமுள்ளதாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் இதனை பற்றி தெரியபடுத்துங்கள்.  அனைத்து திரட்டிகளிலும் நீங்கள் போடும் ஒட்டுகளினால் இன்னும் உலகம் முழுக்க தமிழர்கள் அனைவருக்கும் போய்ச் சேர ஒரு உங்கள் ஒட்டு ஒரு  வாய்ப்பாக அமையும்.


 நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை