கூகிள் ட்ரைவ் இன்று வெளியிடப்படுகிறது


நண்பர்களே கூகிள் நிறுவனத்தின் அடுத்த வரவான கூகிள் ட்ரைவ் இன்னும் சில மணி நேரங்களில் வெளியிடப்படுகிறது. 


கூகிள் ட்ரைவ் 5 ஜிபி வரை இலவ இடமளிக்கிறது ஆன்லைனில்.

பிடிஎப், டாக்குமென்டுகள், வீடியோக்கள், ஆடியோ கோப்புகள் என அனைத்து வகை கோப்புகளையும் சேமித்து  வைத்துக் கொள்ளலாம.

கூகிள் ட்ரைவ் குறித்து கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ கீழே




ட்ராக் அன்ட் ட்ராப் முறையில் பைல்களை சுலபமாக சேமிக்கலாம்.

கூகிள் ட்ரைவில் சேமிக்கும் கோப்புகளை யாருடன் வேண்டுமானலும் பகிர்ந்து கொள்ள முடியும்.

அத்துடன் ஐ போன் மற்றும் ஆன்ட்ராய்ட் போன்ற போன்களிலிருந்தும் அணுக முடியும்.


கூகிள் ட்ரைவ் செல்ல சுட்டி

கூகிள் ட்ரைவ் வெளியிடுவதை கொண்டாடும் விதமாக அனைத்தும் ஜிமெயில் உறுப்பினர்களுக்கும் முன்னர் 7.5 ஜிபி இடமளித்த ஜிமெயில் இன்று முதல் 10 ஜிபி என்று உயர்த்தி வழங்குகிறது.  என்ற சந்தோசமான விசயத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் பின்னூட்டங்கள் என் தவறை திருத்திக் கொள்ள உதவும்.  உங்கள் ஓட்டு மூலம் அனைத்து தரப்பினரையும் இந்த தகவல் சென்றடைய உதவும்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சட்டரீதியான வொன்டர்ஷேர் பிடிஎப் எடிட்டர் மென்பொருள் இலவசமாக

நண்பர்களே ஒரு முழுமையான பிடிஎப் எடிட்டர் வாங்குவதென்றால் இந்திய மதிப்ப்பில் குறைந்தபட்சம் 2000கும் மேல் செலவாகும்.  இப்படி இருக்கையில் யாரும் காசு கொடுத்து வாங்காமால் பைரேட் என்ற திருட்டு மென்பொருட்கள் உபயோகிக்கின்றனர்.  இந்த மாதிரி திருட்டு பொருட்கள் தரவிறக்குபவர்களுக்கு தங்கள் கணினியில் தேவையில்லாத நச்சு தீங்கு நிரல்களும் நிறுவப்படும் என்பது தெரிவதில்லை. 

இதற்கு பதில் சில ஒபன் சோர்ஸ் மென்பொருட்கள் உள்ளன.  அதை தரவிறக்கி உபயோகப்படுத்தலாம்.  அப்படி இல்லையென்றால்  இலவசமாக சில நேரம் சில நாட்களுக்கு மட்டும் கொடுப்பார்கள்.  அதை உபயோகப்படுத்துங்கள்.   அது போல தான் நான் அறிமுகபடுத்த மென்பொருளும் கூட.  பிடிஎப் எடிட்டர் தேவையில்லை என்று சொல்பர்வர்கள் குறைவு.  அவர்களுக்காகவே இந்த மென்பதிவு

Wondershare என்ற நிறுவனத்தின் புதிய மென்பொருள் தயாரிப்பு ஆகும் இது.  இவர்கள் இதுவரை வீடியோ மென்பொருட்கள் தயாரித்து வெளியிட்டிருந்தனர்.  பிறகு மேக் கணினிக்கான பிடிஎப் எடிட்டர் தயாரித்து வெளியிட்டனர். இப்பொழுது விண்டோஸுக்கான பிடிஎப் கன்வெர்ட்டர் தயாரித்து பீட்டா அளவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பீட்டா மென்பொருள் முற்றிலும் இலவசமாகும். ஆனால் நூறு நாட்கள் மட்டுமே வேலை செய்யும்.  இந்த மென்பொருளை நீங்கள் தரவிறக்கி கணினியில் நிறுவிக் கொள்ளலாம்.  அத்துடன் ஆக்டிவேசன் கோடு எதுவும் தேவையில்லை.



WonderShare PDF Editor Beta மென்பொருள் குறித்த தகவல்கள் மற்றும் போட்டி விதிமுறைகள் குறித்த  சுட்டி

இவர்களின் தளத்தில் பீட்ட வெர்சன் குறித்த உங்கள் அனுபவங்களை அல்லது உங்கள் கருத்துக்களை மூன்று முறை அல்லது அதற்கு மேல் Feedback கொடுத்தால்  நீங்கள் இந்த Wondershare PDF Editor வெளிவரும்போது உங்களுக்கான பிடிஎப் எடிட்டரினை பரிசாக வெல்ல வாய்ப்பு உள்ளது.   சுட்டி  இங்கு சென்று உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


Wondershare PDF Editor மென்பொருள் தரவிறக்க  சுட்டி

இந்த வாய்ப்பு ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை கலந்து கொள்ளும் வாசகர்களுக்கு மட்டும்.

அது மட்டுமல்லாமல்  பேஸ்புக்கில் வழியாக இவர்களின் பதிவை பகிர்ந்தால் 30$ மதிப்புள்ள PDF To Powerpoint மென்பொருள் வெல்ல வாய்ப்புள்ளது.

போட்டியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் வாரம் ஒரு முறை PDF Converter Pro 79.95$ மதிப்புள்ள PDF Converter Pro.

சரி இந்த மென்பொருள் மூலம் என்ன செய்ய முடியும்.

எந்த ஒரு வகை பிடிஎப் கோப்புகளையும் எடிட் செய்ய முடியும்.

எந்த ஒரு பிடிஎப் கோப்பினையும் வேர்ட் அல்லது .TXT கோப்பாக சேமிக்க முடியும்.

1000 பக்கம் உள்ள பிடிஎப் கோப்பினை பிரிக்க அல்லது சேர்க்க முடியும்.


மீண்டும் ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ஐபிஎல் 20 20 ஆன்ட்ராய்ட் ஐபோன் ஐபேடு விண்டோஸ் போன் மென்பொருட்கள் இலவசமாக

நண்பர்களே ஐபிஎல் 5 கிரிக்கெட் இன்று கோலாகலமாக இன்று தொடங்குகிறது.  முறைப்படி நாளைதான் கிரிக்கெட் மேட்சுகள் தொடங்குகின்றன.  இன்று தொடக்க விழா மட்டுமே சென்னையில் நடத்தப்படுகிறது.  இவ்வாறு இருக்கையில் அனைத்து போட்டிகளையும் நம்மால் தொடர்ந்து டிவியில் பார்க்க முடியாது.  ஆனால் மொபைல் மூலம் ஸ்கோர் விவரங்கள் தெரிந்து கொள்ள முடியும்.  இப்பொது உள்ள ஆன்ட்ராய்ட் மொபைல் போன்களுக்கான ஐபிஎல் 5 கிரிக்கெட் ஸ்கோர் IPL 5 அப்ளிகேசன்கள் சிலவற்றை இங்கே பதிவிட போகிறேன்.  அப்ளிகேசன் வேண்டும் என்பவர்கள் தரவிறக்கி உபயோகித்துக் கொள்ளவும். 

விண்டோஸ் குறித்த நகைச்சுவை புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு சுட்டி

இந்த பதிவின் மூலம் என் பதிவு 450ஐ தொடுகிறது இது அனைத்திற்கும் உதவிய பதிவர்கள் திரட்டிகள் வாசகர்கள் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  அனைவரும் தொடர்ந்து ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.  அத்துடன் சில விம்பரங்களையும் சுட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  

DLF IPL 2012

இந்த மென்பொருள் ஐபிஎல் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட மென்பொருளாகும்.  இந்த மென்பொருளில் கிரிக்கெட் மேட்சின் ஸ்கோர், முடிந்த விளையாட்டுகளின் முடிவுகள் Results, Match Schedule, கால அட்டவணை போன்றவை இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு அணியின் பற்றிய விரிவான குறிப்புகளுடன் அந்த அணியின் வீரர்களுடைய விபரங்களும் இடம் பெற்றுள்ளது.

முடிந்த விளையாட்டுகளின் புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் செய்திகளும் இந்த மென்பொருள் மூலம் அறிந்து கொள்ளலாம.

 DLF IPL 2012 ஆன்ட்ராய்ட் மென்பொருள் தரவிறக்க சுட்டி

IPL Live Streaming

இந்த ஆன்ட்ராய்ட் மென் பொருள் மூலம் கிரிக்கெட் மேட்சுகளை நேரடியாக காணலாம்.

(குறிப்பு ) உங்கள் மொபைல் போன்களில் அடோப் ப்ளாஷ் ப்ளெயர் ஆதரிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

IPL Live Streaming மென்பொருள் தரவிறக்க சுட்டி

IPL CALENDAR

இந்த மென்பொருள் மூலம் ஐபில் கால அட்டவணைகள் முழுவதும் தெரிந்து கொள்ள முடியும்.  அது மட்டுமல்லாமல் உங்களுக்கு பிடித்த அணி விளையாடும் அன்று உங்களுக்கு ஞாபகமூட்டுமாறும் Remainder Set செய்யலாம்.

IPL CALENDAR மென்பொருள் தரவிறக்க சுட்டி

IPL INDIATIMES

இந்த மென்பொருள் இந்தியாடைம்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மென்பொருளாகும்.  இது ஆன்ட்ராய்ட் மென்பொருள் அல்ல விண்டோஸ் மொபைலுக்கான மென்பொருள்.  விண்டோஸ் மொபைல் உபயோகிக்கும் அனைவருக்கும் இது மிகவும் உபயோகமாக இருக்கும். 

விண்டோஸ் மொபைலுக்கான ஐபில் மென்பொருள் தரவிறக்க் சுட்டி


IPL 2012

இந்த மென்பொருளும் விண்டோஸ் மொபைலுக்கான மென்பொருளாகும்.
இந்த மென்பொருள் மூலம் ஐபில் கால அட்டவணைகள் முழுவதும் தெரிந்து கொள்ள முடியும்.  அது மட்டுமல்லாமல் உங்களுக்கு பிடித்த அணி விளையாடும் அன்று உங்களுக்கு ஞாபகமூட்டுமாறும் Remainder Set செய்யலாம்.

ஐபிஎல் 2012 மென்பொருள் தரவிறக்க சுட்டி

ஐபோன்  மென்பொருள் கீழே கொடுத்துள்ளேன்

IPLT20
 

இந்த மென்பொருள் ஐபிஎல் நிறுவனத்தால் நேரடியாக வெளியிடப்பட்ட மென்பொருளாகும். 

இந்த மென்பொருள் ஐபிஎல் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட மென்பொருளாகும்.  இந்த மென்பொருளில் கிரிக்கெட் மேட்சின் ஸ்கோர், முடிந்த விளையாட்டுகளின் முடிவுகள் Results, Match Schedule, கால அட்டவணை போன்றவை இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு அணியின் பற்றிய விரிவான குறிப்புகளுடன் அந்த அணியின் வீரர்களுடைய விபரங்களும் இடம் பெற்றுள்ளது.

முடிந்த விளையாட்டுகளின் புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் செய்திகளும் இந்த மென்பொருள் மூலம் அறிந்து கொள்ளலாம.

ஐபோன் மற்றும் ஐபேடிற்கான IPLT20 மென்பொருளை தரவிறக்க சுட்டி


ஐபேடுக்கான  மென்பொருள்


ஐபேடுக்கான மென்பொருள் IPL Mania for IPAD






நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

F-Droid Vs Google Play

நண்பர்களே இன்றைய உலகில் போனில் அதிக அளவு விற்பனையாவது ஸ்மார்ட் போன்கள் அதுவும் ஆன்ட்ராய்டு வகை போன்கள் மிக அதிகமாக விறபனையாவதை அனைவரும் அறிந்ததே. ஆன்ட்ராய்ட் ஒரு இலவச இயங்குதளமாகும்.  இந்த வகை இயங்குதள போன்களுக்கு என்று வைத்திருந்த கூகிளின் ஆன்ட்ராய்ட் மார்கெட்டினை கூகிள் ப்ளே என்று பெயர் மாற்றியது சில நாட்களுக்கு முன்புதான் என்பதையும் அறிவீர்கள்.  சரி இந்த வகை ஆன்ட்ராய்ட் இயங்குதள போன்களுக்கு கூகிள் ப்ளே மட்டும்தான் உள்ளதான் என்று பார்த்தால் கூகிளை போன்ற சில தளங்கள் இருக்கதான் செய்கின்றன இதில் ஒரு தளத்தின் எப் ட்ராய்டு  F-Droid.     F-Droid
இந்த தளத்தில் என்ன ஒரு சிறப்பு என்று பார்த்தால் இதில் உள்ள அனைத்து அப்ளிகேசன்களும் இலவசமானவை மட்டுமே.  அதுவும் அனைத்தும் Full Version ஆக கிடைக்கிறது. 


அது மட்டுமல்லாமல் F-Droid நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் பிரவுஸர் வழியாக F-Droid இணையத்தளத்தில் ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை தேடி உங்கள் மொபைலுக்கு தரவிறக்க  முடியும்.
Android Vs F-Droid
இந்த தளத்தின் மூலம் வெளியிடப்படும் அப்ளிகேசன்கள் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலுக்குள் நிறுவி விட்டாலே ஒவ்வொரு முறையும் தானாக அப்டேட் செய்து கொள்ளும்.

 இந்த தளத்திற்கு செல்ல சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

பல் துலக்கும் பேஸ்ட் அனைவருக்கும் இலவசமாக



நண்பர்களே சில நாட்களுக்கு முன் இந்தியர்கள் அனைவருக்கும் இலவசமாக வீட்டு உபயோக பொருட்கள் என்று ஒரு பதிவிட்டிருந்தேன் அது நிறைய நண்பர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்திருக்கும்.

அது போல இதோ ஒரு புதிய இலவசமாக பல் துலக்கும் பேஸ்ட் இலவசமாக உங்களுக்காக வழங்குகிறார்கள்.  கோல்கேட் சென்ஸிடிவ் ப்ரோ ரீலிஃப் Colgate Sensitive Pro-Relief  80கிராம் பேக் இலவசமாக வழங்குகிறார்கள்.
கோல்கேட் பேஸ்ட்
நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி,  வீட்டு முகவரி போன்றவை மட்டுமே அவ்வளவுதான் உங்கள் வீடு தேடி வரும் உங்களுக்கான Colgate Sensitive Pro Relief 80கிராம் பேக்.  இந்த டூத் பேஸ்ட் குறித்த வீடியோ கீழே


வீடியோ தெரியவில்லை என்றால் இங்கு கிளிக் செய்யவும் சுட்டி

இது இரண்டாவது முறையாக அனைவருக்கும் இலவசமாக வழங்கபடுகிறது.  இதற்கு முன் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 

இலவசமாக பேஸ்ட் பெற சுட்டி

இந்த வலைமனை தொடர்ந்து எழுதுவதும் எழுதவைப்பதும் உங்களின் தொடர்ந்து ஆதரவினால் மட்டுமே. உங்கள் ஆதரவும் பின்னூட்டங்கள்  தொடர்ந்து எங்களுக்கு வேண்டும். 


விரைவில் ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.





நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை