குழந்தைகளுக்கான தளம் மற்றும் ஆபிஸ் 2010ல் ரிப்பன் மறைப்பது எப்படி???

நண்பர்களே குழந்தைகளுக்கு வண்ணங்கள் என்பது மிகவும் பிடிக்கும்.  அதுவும் ஒவ்வொரு புதிய விலங்குகள் மற்றும் புதிய வரைபடங்களுக்கு வண்ணங்கள் அடிப்பது என்பது  குழந்தைகளுக்கு மட்டுமே கை வந்த கலை அவர்கள் கொடுக்கு வண்ணங்கள் மிகவும் அழகாக இருக்கும்.  அதை பார்க்கும் பொழுது நமக்கு இருக்கும் கவலைகள் அனைத்தும் மறந்து நாமும் குழந்தைகளின் சூழ்நிலைக்கு போய்விடுவோம்.  இந்த தளத்திலிருந்து நீங்கள் வெறும் பிரிண்ட் அவுட் மட்டும் எடுத்து உங்கள் குழந்தைகளிடம் தந்து விடுங்கள் அவர்கள் பார்த்து வண்ணம் தீட்டட்டும்.  வண்ணம் மட்டுமல்ல பொருளுக்கான பெயர் மற்றும் விடுபட்டை எழுது போன்ற படங்களும் உள்ளன.  

நீங்கள் எடுக்கும் பிரிண்ட் அவுட்டினை மாற்றங்கள் செய்யவும் முடியும்.

அத்துடன் நீங்கள் இந்த தளத்தில் நுழைந்து நேரடியாக பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.  புதிய கணக்கோ அல்லது உங்கள் மின்னஞ்சலோ கொடுக்க வேண்டியதல்ல என்பது இந்த வலைத்தளத்தின் சிறப்பு.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் இந்த தளத்தில் உள்ளது.

வலைத்தள முகவரி சுட்டி

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010ல் ரிப்பன் போல இருக்கும் அனைத்து டூல்களும் காட்சியளிக்கும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் இடம் அதிகமாக பிடித்திருக்கும் இதை மறைக்கலாம் தேவையான போது சுலபமாக கொண்டு வரலாம்.  அதுவும்  ஒரு மவுஸ் கிளிக் அல்லது ஒரு ஷார்ட் கட் கீ மூலமாக அது எப்படி என்று பார்க்கலாம்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010ல் ரிப்பனின் கடைசியில் பார்த்தால் Vயை ( ^ ) தலைகீழாக போட்டது போல ஒரு கீ இருக்கும் அதை கிளிக் செய்தால் உடனே ரிப்பன் மறைந்து விடும்.  திரும்ப வேண்டுமென்றால் அதையே திரும்பவும் கிளிக் செய்தால் திரும்ப வரும்.

இதையே ஹாட் கீ மூலம் செய்யலாம். இதற்கான ஹாட் ஷார்ட் கீ Ctrl + F1 பிடித்து அழுத்தினால் மறைந்துவிடும். திரும்பவும் Ctrl + F1 அழுத்தினால் திரும்ப வரும்.

புதியவர்க்ளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இது மிகவும் வசதியாக இருக்கும்.


சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று இதைத்தான் சொல்வார்கள் Timing Photograph!!!!


நன்றி மீண்டும் வருகிறேன்

5 ஊக்கப்படுத்தியவர்கள்:

Unknown said...

படத்தை எடுத்த கரத்துக்குப் பாராட்டுக்கள்!

Thiruppullani Raguveeradayal said...

இந்தப் படத்தை நேற்று facebookல் நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன். தனி மெயிலில் instantfundas நண்பர் திரு. கௌஷிக்குக்கும் அனுப்பி அவரது வலையிலும் இடுமாறு வேண்டினேன். அவர் இது தற்செயலாக எடுத்த படம் இல்லை என்றும், Fevicol விளம்பரத்துக்காக எடுத்த படம் என்றும் ஏற்கனவே சில வட இந்திய பத்திரிகைகளில் விளம்பரமாக வந்திருந்தது என்றும் பதில் அளித்துள்ளார். ஆனாலும் விளம்பரமோ, தற்செயலோ ஒரு அருமையான படம். வாழ்த்துக்கள் வடிவேலன்.

Colvin said...

குழந்தைகளுக்கான தளம் மிக அருமையாக உள்ளது. மிக்க நன்றி நண்பரே. இத்தளம் எனக்கு மிக உபயோகமாக இருக்கும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிகவும் உபயோகமான தளம்....

படத்தை பற்றி சொல்ல வார்த்தைகளில்லை...

Anonymous said...

This is not timing photograph,
Andha Lady -ooda Left leg + Left hand forward eruku, and right leg + right hand back la eruku..
Normal nadakum pothu.. eppadi erukaathu... !!!!

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை