இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

இலவச சட்ட ரீதியான மென்பொருட்கள் மூன்று உங்களுக்காக

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 300க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே கணிணி வாங்குகின்ற அத்தனை பேரும் உண்மையான மென்பொருளை காசு கொடுத்து வாங்குவதில்லை எல்லாமே உடைக்கப்பட்ட மென்பொருள் அதாவது Cracked Softwares மட்டுமே உபயோகபடுத்துகின்றனர்.  அது அந்த நிறுவனத்திற்கு எவ்வித இழப்புகளை ஏற்படுத்தும் ஆனால் அவர்களாகவே சில நேரங்களில் இதை தடுப்பதற்காக ஒரு நாள் அலல்து ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் என்று வருடத்தில் ஒரு முறையாவது அந்த மென்பொருளை முழு உபயோகத்துடன் கூடிய மென்பொருட்களை இலவசமாக அளிக்கின்றனர்.   அந்த நேரம் தெரிந்தால் எத்தனை பேர் அதை தரவிறக்கி உபயோகபடுத்துவார்கள் அதன் மூலம் அந்த மென்பொருள் அவர்களுக்கு திருப்தி அளித்தால் ஏதாவது மென்கொடை அளிக்க மாட்டார்களா என்று ஒரு எதிர்பார்ப்புதான்.  

அது போலதான் எந்த மென்பொருள் புதியதாக தெரிந்தாலும் படித்தாலும் அது நம் தமிழ் மக்களுக்கு பயன்படட்டுமே என்று முடிந்தவரை உபயோகப்படுத்தி அவர்களுக்கு பதிவுகள் மூலமாக தெரிவித்து வருகின்றேன்.  ஆனால் இது வரை ஒரு வரும் கொடை அளித்ததில்லை என்பது வேறு விஷயம் ஆனால் குறைந்த பட்சம் ஒரு பின்னூட்டம் என்ற ஊக்கத்தையாவது அளிக்கலாம்.  ஆனால் அது கூட அளிக்க தயங்குவது ஏன்?  என்று புரியவில்லை.  இனியாவது படிக்கின்ற நண்பர்கள் கொஞ்சம் விளம்பரங்களை அழுத்தியும் பின்னூட்டங்களை வாரி வழங்கியும் என்னை உற்சாகப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது.

சரி விடுங்கள் எனக்கு ஒவ்வொரு பதிவின்போதும் புலம்புவது வாடிக்கையாக்கி விட்டார்கள்.  நாம் பதிவிற்கு போவோம்.  இன்றும் Professional பதிப்புகள் இலவசமாக வழங்குகிறார்கள் ஒ & ஒ நிறுவனத்தினர் அவர்களுக்காக நாம் ஒரு ஓ போடுவோம்.  அவர்கள் வழங்கும் மென்பொருட்கள் கீழே

O&O Defrag Professional 11

உங்கள் வன் தட்டுக்களை சீராக பராமரிக்க இந்த மென்பொருள் மாதம் ஒரு முறை டிபிராக் செய்தால் நன்றாக் வேலை செய்யும்.  உங்கள் வன் தட்டில் Bad Sector உருவாகமால் தடுக்க முடியும்.

இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளுக்கான இலவச உரிமம் பெற இங்கே சுட்டி


இங்கு சென்று உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண். நீங்கள் வசிக்கும் நாடு  கொடுத்தால் போதும் அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள்ளாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மென்பொருளின் உரிமம் எண் உங்களுக்கு வழங்கப்பட்டு விடும். 

O&O CleverCache 6 Pro

இந்த மென்பொருள் நம்ம CCleaner மாதிரிதான் அதை விட இன்னும் கொஞ்சம் மேம்படுத்தப்பட்டது. இதுவும் மிகவும் உபயோகமான மென்பொருள்  உங்கள் கணிணியி டெம்ப் பைல்கள், டைரக்டரிகள், குக்கீஸ், போன்றவை அனைத்தும் நீக்க இது உபயோகப்படும். 

மென்பொருள் தரவிறக்க சுட்டி

(Get the License Link ) உரிமம் பெற இணைய சுட்டி


O&O Safe Erase 2 Pro
இந்த மென்பொருள் உங்கள் கோப்புகளை யார் கைக்கும் கிடைக்காமல் டெலிட் செய்ய உபயோகப்படும்

மென்பொருள் தரவிறக்க சுட்டி

(Get the License Link ) உரிமம் பெற இணைய சுட்டி


விண்டோஸின் உள்புகு திரையை எளிதில் மாற்ற

உங்கள் விண்டோஸ் உள்புகு திரையை மாற்ற இந்த மென்பொருள் மிகவும் பயன்படும். 

மென்பொருள் தரவிறக்க சுட்டி


பத்து எம்பி அளவுள்ள ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் வேண்டுமா உங்களுக்கு இங்கே செல்லுங்க சுட்டி

இது ஒரு லினக்ஸ் அடிப்படையாக இயங்குதளம் 

டைனிகோர் லினக்ஸ்நன்றி மீண்டும் வருகிறேன்

18 ஊக்கப்படுத்தியவர்கள்:

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை