இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

போலி விமான பயணச்சீட்டு உருவாக்க வேண்டுமா வாருங்கள் இங்கே

நண்பர்களே  150வது பாலோயராக திரு. ஷண்முகப்பிரியன் இணைந்து நம் வலைப்பதிவை பெருமைப்படுத்திருக்கிறார் இவர் யார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.  இவர் ஒரு திரைப்பட எழுத்தாளன்! இயக்குனர்! வெற்றிவிழா, சின்னத்தம்பி பெரிய தம்பி, பிரம்மா போன்று 30 படங்களை எழுதியதும், ஒருவர் வாழும் ஆலயம் போன்று நான்கு படங்களை எழுதி இயக்கியதும் இவரது அனுபவங்கள்.
 

ஷண்முகபிரியனின் படித்துறை என்ற வலைப்பதிவில் எழுதி வருகிறார்.  அவருக்கு நன்றி. இவரை போன்ற பெரியவர்கள் என்னை பின் தொடர்வதற்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. தொழில்நுட்ப பதிவுகளுக்கு இப்படி ஒரு பெருமையா என்று புளகாங்கிதம் அடைகிறேன்.  மிகவும் குறுகிய நாட்களில் அலெக்ஸா ரேங்கில் நான்கு லட்சத்துக்குள் நம் வலைப்பதிவும் வந்துள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளது நன்றி. பின் தொடர்ந்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. கூகிள் ரீடர் மூலமும் மற்ற திரட்டிகளின் மூலம் படிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி. விரைவில் ஒரு லட்சத்துக்குள் வர உங்கள் பேராதரவை தொடர்ந்து அளிக்கவும்.  நாளை என்னுடைய முப்பதாவது பிறந்த நாள் அனைவரும் வாழ்த்துங்கள் வளர்கிறேன்.



நாம் இதுவரை யூட்யுப் தரவிறக்க எத்தனை இணையதளங்கள் பயன்படுத்தியிருப்போம்.  அதில் இதுவும் ஒன்று ஆனால் இதில் ஒரு சிறப்பு இந்த இணையத்தளத்தின் மூலம் Facebook, MySpace போன்ற சமூகதளங்களிலிருந்தும் வீடியோக்களை தரவிறக்கலாம் என்பதே அது.

இந்த தளத்திற்கு செல்லுங்கள் சுட்டி

நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் சுட்டியை கொடுங்கள். அந்த சுட்டிகள் இப்படி இருக்க வேண்டும்.

Youtube Link

http://www.youtube.com/watch?v=wcdl0BOwpeQ

MySpace Link

http://vides.myspace.com/index.cfm?fuseaction=vids.individual&videoid=58793690

Facebook Link

http://www.facebook.com/video/video.php?v=37511833824

இணையத்தள சுட்டி


இதுவரை விமான பயணம் எல்லோருக்கும் கிடைத்திருக்குமா! என்பது சந்தேகமே சிலர் விமான பயணச்சீட்டைக்கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.  ஆனால் உங்கள் பெயரிலே ஒரு விமான பயணச்சீட்டை வாங்க வேண்டும் என்றால் நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

அதற்காக போலி விமான பயணச்சீட்டை உருவாக்க இந்த தளம் உங்களுக்கு உதவுகிறது.  உங்கள் நண்பர்களிடம் போலி விமான பயணச்சீட்டு அச்சடித்து காட்டலாம் ஆனால் இதை வைத்து விமான நிலையத்திற்குள் செல்ல முயற்சிக்காதீர்கள் அது பெரிய பிரச்சனைக்கு இட்டுச் செல்ல வாய்ப்பு உருவாகலாம்.   பார்ப்பதற்கு விமான பயணச்சீட்டு போலவே இருக்கும் விமான பயணச்சீட்டை உருவாக்க ஒரு தளம் சுட்டி



உங்கள் புகைப்படத்தை கண்ணாடியில் பிம்பம் தெரிவது போல மாற்ற இங்கே செல்லவும் சுட்டி
 
கண்ணாடி எபெக்டில் மாற்றிய என் மகனின் புகைப்படம் 

நன்றி மீண்டும் வருகிறேன்




» Read More...

சுருக்கப்பட்ட வார்த்தைக்கு விவரிக்கப்பட்ட வார்த்தை மென்பொருள்

நண்பர்களே நான் எத்தனையோ திரையை படம்பிடிக்கும் மென்பொருள் கொடுத்திருந்தாலும் இந்த மென்பொருள் சில புதிய விஷயங்களையும் செய்வதால் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.



நீங்கள் திரையை படம்பிடிக்கும் கோப்புகள் அனைத்தும் .AVI கோப்பாக மட்டுமே படம்பிடித்துத் தரும்.  ஆனால் இந்த மென்பொருள் .FLV, .WMV, .SWF போன்ற கோப்புகளாக படம் பிடித்து தரும் வசதி உள்ளது.


மென்பொருள் தரவிறக்க சுட்டி


நீங்கள் உங்களிடம் SWF வகை கோப்புகள் உள்ளதா அதில் இருந்து உங்களுக்கு தேவையான படங்களை மட்டும் பிரித்து எடுக்க வேண்டுமா?  ஆனால் முடியாது என்பர் சிலர் முடியும் என்று சொல்லுங்கள் இதோ அதற்கு என்று ஒரு மென்பொருள்.  இந்த மென்பொருள் மூலம் SWF கோப்புகளில் உள்ள புகைப்படங்களை தனியாகவோ மொத்தாமாகவோ பிரித்து எடுத்து கையாள முடியும். மென்பொருள் தரவிறக்க சுட்டி



உங்களிடம் USB என்பதற்கு அர்த்தம் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் உடனே Universal Serial Bus என்று கூறுவீர்கள். இது போன்ற ஒவ்வொரு  சுருக்கப்பட்ட வார்த்தைகளுக்கான விவரிக்கப்பட்ட வார்த்தைகள் கொண்ட டேட்டாபேஸ் மென்பொருள் ஒன்று தனி மனிதர்கள் ஒன்று கூடி உருவாக்கி இலவசமாக தந்திருக்கிறார்கள்.  உங்களுக்கு பிடித்திருந்தால் பணமும் கொடுக்கலாம்.

இந்த மென்பொருளில் 17,105 சுருக்கப்பட்ட வார்த்தைகளுக்கான விவரிக்கப்பட்ட வார்த்தைகள் உள்ளன.  இது அவ்வப்பொழுது புதிய வார்த்தைகள் பதியப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மென்பொருளை அவ்வப்போது நீங்கள் அப்டேட் செய்தால் போதும். Smiley உபயோகபடுத்த ஒரு அகராதியும் இதில் உண்டு.


மென்பொருள் தரவிறக்க சுட்டி




உங்களிடம் யுஎஸ்பி டிரைவ் அது 8ஜிபி அளவுள்ளதா உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி விஸ்டா டிவிடி உள்ளதா அந்த டிவிடிக்களை ஒவ்வொரு முறையும் நிறுவ உபயோகப்படுத்துவீர்களா.  ஆம் என்றால் உங்களுக்குதான்  இந்த மென்பொருள்.  இந்த மென்பொருள் மூலம் சிடியிலிருந்து யுஎஸ்பி டிரைவிற்கு உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி டிஸ்கினை சேமித்துக் கொடுக்கும் இதனால் நீங்கள் உங்கள் விண்டோஸ் பார்மெட் செய்து நிறுவ சிடியை தேவையில்லை இந்த யுஎஸ்பி டிரைவினை வைத்து பூட்டபிளாக நிறுவ வேண்டும்.  மென்பொருள் சுட்டி



நன்றி மீண்டும் வருகிறேன்.

உங்கள் ஒட்டுக்களை தமிழிசிலும் தமிழ்10 லும், தமிழ்மணத்திலும் குத்துங்கள்.

» Read More...

பிரவுஸிங் சென்டரில் இணையம் வழியே உலாவும் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்

நண்பர்களே வீட்டுக் கணிணி வழியாக இணையத்தில் உலாவும் போது மட்டுமல்ல பொது கணிணிகளான சைபர் கபேக்கள், இண்டெர்நெட் பிரவுசிங் சென்டர்களில் உள்ள கணிணி வழியாக இணையத்தில் உலாவும் போதும் மிகவும் உஷாராகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். 

முதல் விஷயம் நீங்கள் பொதுக் கணிணியில் அமர்ந்து உங்கள் வேலைகளை முடித்தவுடன் கட்டாயம் அக்கவுண்டிலிருந்து  Logout அல்லது Sign Out செய்ய வேண்டும்.

நீங்கள் கணிணியில் உலாவிக் கொண்டிருக்கும் போது எக்காரணத்தைக் கொண்டும் அப்படியே போட்டுவிட்டு வெளியே செல்லக்கூடாது.  சில நேரம் செல்பேசி அழைக்கும் உள்ளே சிக்னல் கிடைக்க வில்லை என்றவுடன் அப்படியே சென்றுவிடுவார்கள். அதுபோல் எப்பொழுதும் செல்லக் கூடாது.

நீங்கள் பொதுக் கணிணியை உபயோகித்து முடித்தவுடன் மறக்காமல் குக்கீஸ், தற்காலிக இணைய கோப்புகள், (Temporary Internet Files) அனைத்தையும் துடைத்து விடுங்கள். 

முடிந்தவரை ஆன்லைன் பணபரிமாற்றங்களை பொதுக்கணிணியில் மட்டும் செய்வதை தவிருங்கள். அது மிகவும் நல்லது உங்களுக்கும்  உங்கள் பணத்திற்கும்.


நீங்கள் வைத்திருக்கும் சில டெக்ஸ்ட் கோப்புகள் அளவு அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறதா?  இந்த தளத்திற்கு செல்லுங்கள் நீங்கள் டைப் செய்து வைத்திருக்கும் கோப்புகளில் உள்ள எழுத்துக்களை காப்பி செய்து இந்த தளத்தில் பேஸ்ட் செய்யுங்கள் முடிந்தது சுலபமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். சுட்டி








நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சவால் விடுங்கள் உன்னுடைய கடவுச் சொல்லை கண்டுபிடிப்பேன் என்று. எப்படி என்று வினவுவார். சுலபமாக முதலில் உங்கள் நண்பரை கடவுச் சொல்லை டைப் செய்ய சொல்லுங்கள் ஆனால் டைப் செய்ய மட்டுமே வேண்டும் என்டர் தட்டக்கூடாது. பிறகு கீழுள்ள ஜாவாஸ்கிரிப்ட் கோடை காப்பி செய்து அட்ரஸ்பாரில் பேஸ்ட் செய்து என்டர் தட்டுங்கள் என்ன கடவுச் சொல் என்று தானாக காட்டி விடும்.











நன்றி மீண்டும் வருகிறேன்




» Read More...

ஆன்லைனில் பிடிஎப் கோப்புகளை படிக்க சிறந்த இலவச தளங்கள்

நண்பர்களே நாம் ஒவ்வொரு முறை பிடிஎப் கோப்புகளை படிப்பதற்கு அடோப் அல்லது பாக்ஸிட் ரீடர் போன்ற மென்பொருள்களை நாடுகிறோம்.  ஆனால் நாம் வெளியில் இண்டெர்நெட் பிரவுஸிங் சென்டரில் இருக்கும் போது சில நேரம் இந்த மாதிரி மென்பொருள் இல்லாமல் இருக்கும்.  அப்பொழுது இந்த மாதிரி ஆன்லைன் தளங்கள் மிகவும் உதவியாக இருக்கு.  அது மட்டுமில்லாமல் ஒரு தளத்தில் ஒரு பிடிஎப் கோப்பு இருக்கும் அந்த கோப்பினை தரவிறக்கி படிக்காமல் நேரடியாக இந்த தளங்களில் உள்ளீடு செய்து படிக்கலாம்.  வேண்டும் என்றால் தரவிறக்கி கொள்ளலாம்.

பிடிஎப் மீ நாட்


வியுசிட்


சாம்ராஜ்டேட்டா



 யாஹூ நிறுவனம் தனது சாட்டிங் மென்பொருளான யாஹூ மெஸெஞ்சர் புதிய பதிப்பு 10 வெளியிட்டுள்ளது.  இந்த புதிய பதிப்பில் வெகு தெளிவான வீடியோ சாட்டிங் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.  புதிய பதிப்பு தரவிறக்க சுட்டி

போர்டபிள் விண்டோஸ் மீடியா ப்ளேயர் 12 (விண்டோஸ் எக்ஸ்பி
மற்றும் விஸ்டாவில் உபயோகிக்கலாம்) உங்களுக்காக மீடியா ப்ளேயர் 
தரவிறக்க சுட்டி
 
புடவை கட்டுவது எப்படி என்று ஒரு புகைப்படம்






நன்றி மீண்டும் வருகிறேன்




» Read More...

ஆல் இன் ஒன் பிடிஎப் டூல் உங்களுக்காக

நண்பர்களே அனைவரும் விநாயகர் சதுர்த்தியை மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் கொண்டாடியிருப்பீர்கள் அந்த மகிழ்ச்சியுடன் இந்த வார முதல் நாளை தொடங்குவோம்.  இன்று நான் அறிமுகப்படுத்தப்படும் மென்பொருள் ஒரு பிடிஎப் கருவி ஆங்கிலத்தில் All in One PDF Tools இதன் பெயரும் இதுதான்.



இந்த மென்பொருள் மூலம் செய்யக்கூடியவை

ஒரு பிடிஎப் கோப்பை Encrypt (என்கிரிப்ட்) செய்ய முடியும்.

என்கிரிப்ட் செய்யப்பட்ட கோப்பை (டிகிரிப்ட்) Decrypt செய்ய முடியும்.

பல பிடிஎப் கோப்புகளை ஒரே கோப்பாக மாற்ற முடியும்.

ஒரு பிடிஎப் கோப்பில் உள்ள பக்கங்களை தனித்தனி பிடிஎப் கோப்புகளாக பிரிக்க முடியும்.


பிடிஎப் கோப்பில் ஸ்டாம்ப் செய்ய முடியும் (ஒரு வார்த்தையை பிடிஎப் கோப்பின் பக்கங்களின் மேல் ஸ்டாம்ப் போல குத்துவது)


XML எக்ஸ்எம்ல் கோப்புகள் வழியாக பிடிஎப் கோப்புகள் உருவாக்க முடியும். (வேர்ட், எக்ஸல் கோப்புகளை XML எக்ஸ்எம்ல் கோப்புகளாக உருவாக்க முடியும்)
 
ஆல் இன் ஒன் பிடிஎப் டூல்ஸை தரவிறக்க சுட்டி
பேட்டரி கேர்
நிறைய நண்பர்கள் தங்களுடைய லேப்டாப்கள் பேட்டரி எந்த நிறுவனத்தினருடையது அந்த பேட்டரி எந்தளவு சார்ஜ் ஆகும். முழு பேட்டரியும் சார்ஜ் ஆகிவிட்டதா என்று தெரிந்து கொள்ள.  பேட்டரி பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள என்று நிறைய விஷயங்களை  இந்த மென்பொருள்  செய்கிறது சுட்டி






நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

விநாயகர்சதுர்த்தி நாளில் ஒரு விருது

நண்பர்களே மீண்டும் ஒரு விருது கிடைத்திருக்கிறது நம் நண்பர் சூர்யகண்ணன் மூலம் அவர் தனக்கு கொடுத்த விருதினை பத்து பேருக்கு கொடுத்திருக்கிறார்.  அதில் அடியேனும் ஒருவன் என்பதால் எனக்கு பிடித்த பத்து பதிவர்களுக்கு விருதுகள் அளிக்கிறேன்.



பிகேபி  - http://pkp.blogspot.com/

வேலன்   -  http://velang.blogspot.com

தமிழ்நெஞ்சம் - http://amazingphotos4all.blogspot.com

நா. முத்துக்குமார் சிஙக்ப்பூர்  - http://muthukumar-leica.blogspot.com

எண் எழுத்து இகழேல்  -  http://sumazla.blogspot.com

வகுப்பறை வாத்தியார் - http://classroom2007.blogspot.com

டவுசர் பாண்டி     -   http://athekangal.blogspot.com

பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்  -    http://jackiesekar.blogspot.com

ரிஷான் ஷெரிப் -     http://www.mrishanshareef.tk

வால்பையன்   -    http://valpaiyan.blogspot.com






விருது பெற்ற நண்பர்கள் உங்களுக்கு பிடித்த பத்து நண்பர்களுக்கு விருது வழங்கும்படி கேட்டுக் கொள்கிறார்கள்.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

இலவசமாக புகைப்படம் எடிட் செய்ய பத்து இணையத்தளங்கள் உங்களுக்காக

நண்பர்களே உங்கள் அனைவரது ஆதரவினால் நம்முடைய வலைப்பூ விகடனில் குட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளி வந்துள்ளது.  இதற்காக விகடன் நிறுவனத்திருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முழு காரணமும் நம் நண்பர்கள் ஆதரவும் அவர்களின் தினசரி பங்களிப்பும்தான் என்று பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.


இன்று நண்பர்களே ஆன்லைனில் புகைப்பட கோப்புகளை எடிட் செய்ய பத்து வகையான இணையத்தளங்கள் கொடுக்க போகிறேன்.



Pixlr

Pictreat

Imageditor.net

Online Image Editor

Makeup Photo

Fotocrip

FlauntR

SumoPaint

Picnik

Photoshop Express




இணையத்தளங்களிலிலும் குப்பைகள் இருக்கிறது என்று கூறுகிறது ஆன்டிவைரஸுக்கு புகழ் பெற்ற நிறுவனமான நார்டன் அவர்கள் குப்பையான இணையத்தளங்கள் என்று சிலவற்றை பட்டியல் போட்டு வெளியிட்டுள்ளது. பட்டியலில் சில தளங்கள்

 http://www.17ebook.com
 http://www.aladel.net
 http://www.bpwhamburgorchardpark.org
 http://www.clicnews.com
 http://www.dfwdiesel.net
 http://www.divineenterprises.net
 http://www.fantasticfilms.ru
 http://www.gardensrestaurantandcatering.com
 http://www.ginedis.com
 http://www.gncr.org
 http://www.hdvideoforums.org
 http://www.hihanin.com
 http://www.kingfamilyphotoalbum.com
 http://www.likaraoke.com
 http://www.mactep.org
 http://www.magic4you.nu
 http://www.marbling.pe.kr
 http://www.nacjalneg.info
 http://www.pronline.ru
 http://www.purplehoodie.com
 http://www.qsng.cn
 http://www.seksburada.net
 http://www.sportsmansclub.net
 http://www.stock888.cn
 http://www.tathli.com
 http://www.teamclouds.com
 http://www.texaswhitetailfever.com
 http://www.wadefamilytree.org
 http://www.xnescat.info
 http://www.yt118.com


உங்கள் கணிணியை வேறு யாருக்காவது கொடுக்க அல்லது விற்பனை செய்வதற்கு முன் இந்த மென்பொருள் உங்கள் கணிணியி சுத்தமாக துடைத்து விடுங்கள் மிகவும் நல்லது சுட்டி

இந்த மென்பொருள் குறித்த வீடியோ






அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.  விநாயகர் சதுர்த்தி நன்னாளில் அனைவரும் அனைத்தும் பெற விநாயகரை பிரார்த்திக்கிறேன்.



குறிப்பு -  படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்.

பதிவுகள் பிடித்திருந்தால் தமிழிசிலும் தமிழ்10லும் தமிழ்மணத்திலும் ஒட்டுக்களை குத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். சில பல விளம்பரங்களை கிளிக் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி மீண்டும் வருகிறேன்.




» Read More...

நீங்களும் ஒரு ஒவியர்தான் கணிணி இருக்கையிலே

நண்பர்களே அனைவருக்கும் வணக்கம் தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் மிகவும் நன்றிகள் பல


இதற்கு முன் சட்டரீதியான பிடிஎப் டூ வேர்ட் மாற்றி கொடுத்த நான் மீண்டும் ஒரு இலவச பிடிஎப் டூ வேர்ட் மாற்றி உங்களுக்காக தருகிறேன். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் காப்பி ப்ரொடெக்ட் (Copy Protect) செய்யப்பட்ட பிடிஎப் கோப்பிலிருந்தும் வேர்டுக்கு மாற்றலாம்.  இதை ஒரு முறை ரெஜிஸ்டர் செய்தால் வாழ்நாள் முழுவதும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதை ரெஜிஸ்டர் செய்ய இங்கு செல்லுங்கள்.  இங்கு ஒரு எளிய கணக்கு கேள்வி கேட்பார்கள்.  அதற்கு பதில் அளித்தால் போதும் உடனே ரெஜிஸ்ட்ரேசன் கீ (Registration Key) கொடுத்து விடுவார்கள்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி


சில நேரம் உங்கள் குப்பைத்தொட்டியை (Recycle Bin) தெரியாமல் காலி (Empty Recycle Bin) செய்து விடுவீர்கள்.  பிறகுதான் தோன்றும் அதில் ஒரு கோப்பை தவறுதலாக அழித்து விட்டோமே என்று. அந்த மாதிரி சமயத்தில் கை கொடுக்கிறது  இந்த மென்பொருள்.  இந்த மென்பொருள் உங்கள் கணிணியில் இருந்து மட்டுமல்ல உங்களது யுஎஸ்பி பென் ட்ரைவ், மற்றும் மெமரி கார்டு போன்றவற்றிலும் இருந்து மீட்டெடுக்கும்.
மென்பொருள் தரவிறக்க சுட்டி


நம் குழந்தைகள் புகைப்படத்தை சாதரணமாக பார்த்தாலே நமக்கு மிகவும் சந்தோசம் வரும்.  நம் குழந்தை முகத்தை ஒரு ஒவியர் வரைந்து கொடுத்தால் எவ்வளவு சந்தோசம் இரண்டு மடங்காகும்.  ஆனால் ஒரு ஒவியரை தேட வேண்டும். அவர் முன் ஆடாமல் அசையமால் அமர்ந்து இருக்க வேண்டும் குழந்தைகளிடம் இதை எதிர்பார்க்க முடியாது. அதை நாமே கையால் வரைந்தால் நமக்கு வரையத் தெரியாது.  அதற்கு ஒரு மென்பொருள் இருந்தால் எப்படி இருக்கும்.  இருந்தால் என்ன இருக்கிறது. அதை இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள் சுட்டி.



நீங்கள் வைத்திருக்கும் வீடியோக்களை .WMV கோப்பாக (விண்டோஸ் மீடியா வீடியோ கோப்பாக ) மாற்ற இந்த இலவச மென்பொருள் தரவிறக்க சுட்டி




(படங்களை பெரிதாக்க படத்தின் மேல் கிளிக் செய்து பார்க்கவும்)

பதிவு பிடித்திருந்தால் தமிழிலிசிலும் தமிழ்10லும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடவும். சில பல விளம்பரங்களை கிளிக் செய்யவும்.

இன்னும் நிறைய மென்பொருட்கள் இணையத்தளங்களுடன் திரும்பவும்

நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

விண்டோஸ் வெர்சன்கள் மற்றும் கூகிள் ரீடர் ஒரு பார்வை

நண்பர்களே கூகிள் ரீடர் என்றால் என்ன என்று தெரியுமா?

நீங்கள் ஒவ்வொரு முறையும் என்னுடைய வலைத்தளத்திற்கு வராமால் நேரடியாக கூகிள் ரீடர் மூலம் படிக்க முடியும். அதாவது ஒவ்வொரு புதிய பதிவு வெளி வரும் போது உங்கள் கூகிள் ரீடரில் நேரடியாக பதிவு வெளிவந்த பதினைந்து நிமிடத்திற்குள்ளாக உங்கள் கூகிள் ரீடரில் என்னுடைய பதிவின் காப்பி வந்து விடும்.  இதனால் நீங்கள் என் வலைத்தளத்திற்கு வாராமால் என்னுடைய பதிவுகளை படிக்க முடியும். வலைப்பூக்கள் மட்டுமல்ல அநேக இணையத்தளங்களை இதன் மூலம் படிக்க முடியும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கூகிள் கணக்கு உங்களுக்கு வேண்டும்.

உங்களிடம் கூகிள் கணக்கு இருந்தால் இங்கு செல்லவும்.  சுட்டி

இதில் உங்கள் கூகிள் யூசர் நேம் (User Name) கடவுச் சொல்  (Password) கொடுக்கவும்.

பின்னர் இது போல் உங்களுக்கு ஒரு பக்கம் தோன்றும்.

அதில் இடது பக்கம்  +Add to Subscribtion என்ற பொத்தான் இருக்கும் அதை அழுத்தினால் அதன் கீழே ஒரு பெட்டி தோன்றும். 

அந்த பெட்டியில் உங்களுக்கு பிடித்த வலைத்தளத்தின் பெயரை கொடுக்கவும். பிறகு Add என்ற பொத்தானை அழுத்தவும்.  சில நொடிகளில் நீங்கள் கொடுத்த வலைத்தளத்தில் உள்ள பதிவுகள் வலது பக்கம் தோன்றியிருக்கும்.


இந்த கூகிள் ரீடரில் நிறைய வசதிகள் உண்டு.  உங்களுக்கு பிடித்த பதிவுகளை உங்களுக்கு நண்பர்களுக்கு தெரிவிக்கலாம்.  பகிர்ந்து கொள்ளலாம்.



காஸ்பர்ஸ்கை ஆன்டி வைரஸ் Uninstall செய்தாலும் சில நேரம் சரியாக நீக்க முடியாது.  இதை கருத்தில் கொண்டு அந்த நிறுவனமே காஸ்பர்ஸகை நீக்க மென்பொருள் கொடுத்துள்ளனர்.  தரவிறக்க சுட்டி


மின் புத்தகங்களை தேட புதிய ஒரு தேடு பொறி இதன் பெயர் இபுக்ட்யுபர்

இணையத்தள சுட்டி
 
இதுவரை வெளி வந்த விண்டோஸ் வெர்சன்கள் புதியவர்களின் பார்வைக்கு
Operating System Version Number Other Information
Windows 1.0 1.04
Windows 2.0 2.11
Windows 3.0 3
Windows NT 3.1 3.10.528
Windows for Workgroups 3.11 3.11
Windows NT Workstation 3.5 3.5.807
Windows NT Workstation 3.51 3.51.1057
Windows 95 4.0.950
Windows NT Workstation 4.0 4.0.1381
Windows 98 4.1.1998
Windows 98 Second Edition 4.1.2222
Windows Me 4.90.3000
Windows 2000 Professional 5.0.2195
Windows XP 5.1.2600 Current SP3
Windows XP Professional x64 Edition 5.2.3790
Windows Vista 6.0.6000 Current Version changed to 6.0.6002 with SP2
Windows 7 6.1.7600 RTM
உங்களுக்கு பிடித்திருந்தால் தமிழிசிலும் தமிழ்10லும் தமிழ்மணத்திலும் ஒட்டு போடவும். சில பல விளம்பரங்களை கிளிக் செய்யவும்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை