கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்

நண்பர்களே அனைவருக்கும் வணக்கம்.   உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருட்கள் என்று சில உண்டு.




அதன் பட்டியல் கீழே கொடுத்துள்ளேன்.  இல்லாதவர்கள் தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். உங்களிடம் இருந்தால் தரவிறக்கி நிறுவ வேண்டாம். அதற்குப்பதில் இதை கிளிக் செய்யுங்கள்.

சி சி கீளினர் (CCleaner)


இந்த மென்பொருள் இருந்தால் உங்கள் தேவையில்லாத இண்டெர்நெட் குக்கீஸ், மற்றும் தற்காலிக கோப்புகள், தேவையில்லாத கோப்புகள் அனைத்தும் நீக்கி விடும். அதுமட்டும் அல்ல இதில் தேவையில்லாத ரெஜிஸ்டரி கீகளையும் நீக்கி தரும்.  உங்களுக்கு தேவையில்லாத மென்பொருட்கள் நிறுவி இருந்தால் இதன் மூலம் நீக்க முடியும்.

மென்பொருள்  தரவிறக்க சுட்டி

டெஸ்க்டாப் டோபியா (DesktopTopia)

உங்கள் கணணியில் உள்ள டெஸ்க்டாப்பில் வால்பேப்பர்கள் தானாகவே மாற்ற இது உதவும்

சுட்டி

ஆடாசிட்டி (AudaCity)

இந்த மென்பொருள் உங்களிடம் உள்ள எம்பி3 இசைக்கோப்புகளை திறந்து இசையை நீங்கள் விரும்பியவாறு மாற்றம் செய்ய உதவுகிறது.

சுட்டி

அப்டேட் செக்கர் (Update Checker)


நீங்கள் கணணியில் நிறுவி உள்ள அனைத்து மென்பொருட்களுக்கும் ஏதாவது புதிய பதிப்பு வெளியிடப்பட்டால் தானாகவே உங்களிடம் தெரிவித்து தரவிறக்கி தந்து நிறுவி விடும்.

சுட்டி

லான்சி (Launchy)

இந்த மென்பொருள் மூலம் பலதரப்பட்ட மென்பொருட்களை இயங்க வைக்க  முடியும்.

சுட்டி

விஎல்சி ப்ளேயர் (VLC Player)


இந்த மென்பொருள் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் தெரியாதவர்களுக்காக புதியவர்களுக்காக இந்த மென்பொருள் மூலம் நீங்கள் உங்களிடம் உள்ள ஒலி மற்றும் எந்த விதமான ஒலி ஒளி கோப்புகளையும் இயக்கிப் பார்க்க கேட்க முடியும்.

சுட்டி

பிக்காஸா (Picasa)

இந்த மென்பொருளை உருவாக்கியவர்கள் கூகிள் தேடல்  நிறுவனத்தினர்.  இந்த மென்பொருள் மூலம் உங்கள் புகைப்படங்களை தனித்தனி தொகுப்புகளாக பதிந்து வைத்துக் கொள்ள முடியும். அது மட்டுமில்லை உங்கள் புகைப்படங்கள் எடிட் செய்ய முடியும்.

சுட்டி

யுட்யுப் டவுண்லோடர் (YouTube Downloader)

இந்த மென்பொருள் மூலம் யுட்யுப படங்களை தரவிறக்கி காண முடியும்.
இந்த மென்பொருள் இப்பொழுது யுட்யுப் மட்டும் இல்லாமல் டெயிலி மோசன், யாகூ வீடியோ போன்ற தளங்களையும் ஆதரிக்கிறது.

சுட்டி

டிபிராக்லர் (Defraggler)

மாதம் ஒரு முறை இந்த மென்பொருள் மூலம் டிபிராகிங் செய்தால் உங்கள் கோப்புகள் உங்கள் வன்தட்டில் பல இடங்களில் பிரித்து பதியப்பட்ட கோப்புகள் ஒரே கோட்டில் வரிசையாக பதிக்கப்படும் இதனால் உங்கள் கணணியில் உள்ள  கோப்புகளை கையாளும் வேகம் வெகுவாக அதிகரிக்கும்.

சுட்டி

பதிவுகளை படித்து பயன் பெறும் நீங்கள் நாங்களும் பயன் பெற விளம்பரங்களை கிளிக் செய்யவும்.

நன்றி மீண்டும் வருகிறேன்

6 ஊக்கப்படுத்தியவர்கள்:

கடைக்குட்டி said...

கம்ப்யூட்டர்னா நெம்ப புடிக்குமோ??

கடைக்குட்டி said...

adds மானாவாரியா க்ளிக்கிட்டேன்...

நீங்களும் என் தளத்திற்க்கு வந்து கணக்கை நேர் செய்யவும்.. :-)

கடைக்குட்டி said...

2000 லேர்ந்து வலையுலகில் இருக்கீங்களா ???

Suresh said...

super i have cccleaner and picasa but got very good info

தல இனி நானும் உங்க பாலோவர்

Vadielan R said...

நன்றி சுரேஷ் மற்றும் கடைக்குட்டி

வலையுலகில் 2000ல இருந்து இருந்தாலும் கடந்த எட்டு மாதமாகதான் மிகவும் தொடர்ந்து எழுத ஆரம்பித்துள்ளேன். உங்கள் கணக்கை நேர் செய்ய முடியவில்லை உங்கள் பிட்வெர்டைசர் விளம்பரங்கள் 403 Forbidden என்று பிழைச்சொல் வருகிறது என்னவென்று பாருங்கள் பின்னர் உங்கள் கணக்கை கட்டாயம் நேர் செய்கிறேன். தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள் ஊக்கம் அளித்திடுங்கள். கணணி என்றால் மிகவும் ரொம்ப பிடிக்கும் கணணியுடன் இணைய இணைப்பு இருந்தால் சோறு தண்ணீர் தேவையில்லை

கடைக்குட்டி said...

malware detected ன்னு காட்டுது உங்க தளத்துல....நானும் இந்தக் காரணத்துக்காகதான் gurujiய தூக்குனேன்... இப்போ bidvertiser correct ஆத்தான் ஒர்க் ஆகுதுன்னு சொல்றாங்க...

நீங்க திருப்பியும் ஒருக்கா முயற்சி பண்ணுங்க!!!

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை