எளிதாக ஒலிஒளி தரவிறக்க ஒரு இலவச மென்பொருள்

நண்பர்களே நாம் ஆன்லைன் வழியாக எத்தனையோ படம் பார்த்திருப்போம் எம்பி3 பாடல்கள் கேட்டிருப்போம். ஆனால் அவைகளை தரவிறக்க தனித்தனி 
மென்பொருட்கள் உபயோகித்துதான் தரவிறக்க வேண்டியிருக்கும். இதற்கு தீர்வாக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் VideoCacheView. இந்த மென்பொருளை நிறுவ தேவையில்லை நேரடியாக இயக்கலாம். இது அளவிலும் வெறும் 64கேபி மட்டுமே.  இதன் மூலம் நீங்கள் முழு படமும் பார்த்து முடித்த பிறகு இந்த மென்பொருள் மூலம் நீங்கள் பிரவுஸர் கேட்ச்சில் சேமிக்கப்பட்டிருக்கும் வீடியோ அல்லது ஆடியோ பைலை நீங்கள் வேற இடத்தில் சேமிக்கலாம். இதன் மூலம் நீங்கள் விரும்பும் படங்களை இந்த மென்பொருள் மூலம் சுலபமாக சேமித்து வேண்டும் என்ற போது நீங்கள் இயக்கி பார்த்துக் கொள்ளலாம்.



 
 


மென்பொருள் தரவிறக்க சுட்டி


குறிப்பு  : பதிவுகளை படிக்கும் நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம் நான் அலுவலகத்தில் இருந்து கொண்டு பதிவு எழுதுபவன் ஆகையால் நீங்கள் படிக்கும் பதிவு உபயோகமாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சொல்லவும். அத்துடன் ஒரு பின்னூட்டம் இடவும். என்னுடைய பதிவுகள் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் உடனே உங்கள் வசவுகளையும் கருத்துகளையும் நீங்கள் பின்னூட்டம் இட்டால் இன்னும் பதிவுகள் இட மிகவும் உற்சாகமாகவும் திருத்திக் கொள்ள வசதியாகவும் இருக்கும். 


நன்றி மீண்டும் வருகிறேன்


6 ஊக்கப்படுத்தியவர்கள்:

வால்பையன் said...

//பதிவுகளை படிக்கும் நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம் நான் அலுவலகத்தில் இருந்து கொண்டு பதிவு எழுதுபவன் ஆகையால் நீங்கள் படிக்கும் பதிவு உபயோகமாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சொல்லவும். அத்துடன் ஒரு பின்னூட்டம் இடவும். என்னுடைய பதிவுகள் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் உடனே உங்கள் வசவுகளையும் கருத்துகளையும் நீங்கள் பின்னூட்டம் இட்டால் இன்னும் பதிவுகள் இட மிகவும் உற்சாகமாகவும் திருத்திக் கொள்ள வசதியாகவும் இருக்கும். //

அப்படியெல்லாம் எதுமில்லை நண்பரே!
உங்களுடய சேவை மிகவும் பயனுள்ளது தான், ஆனால் எல்லா பதிவிலும் வெறும் நன்றி என்று போட்டு செல்வது ரெடிமேட் டெம்ப்ளெட் மாதிரி இருக்கும் அதனால் தான் எதாவது சந்தேகம் இருப்பின் தாமதம் செய்யாமல் உடனே கேட்டு விடுகிறேன்.

Anonymous said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்

நிகழ்காலத்தில்... said...

அலுவலக வேலைப் பளுவையும் தாங்கிக் கொண்டு, வலையுலக நண்பர்கள் பயன் பெறும் வகையில் பல உபயோகமான தகவல்கள் தருகிறீர்கள். வாழ்த்துக்கள்

Colvin said...

அருமையான பதிவுகளை தரும் உங்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்.

கட்டுரைகள் சிலவற்றை எழுதும்போது விரிவான விளக்கத்துடன் எழுதினால் இன்னும் நலம்

dsfs said...

you are very good and going tracks very well and best to readers. u are caring and designing the matter very well.

wish you all the best

MGRAVI said...

என்னை போன்ற பழகுனர்களுக்கு உங்களுடைய பதிவுகள் மிகவும் பயன்னுள்ளதாக இருக்கும்.
உங்கள் பணி தொடர என் இனிய நல வாழ்த்துக்கள் ...............

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை