ஸ்டார்ட் மெனு வேகமாக திறக்க வேண்டுமா?

நண்பர்களே சிலருடைய ஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்தால் ஏழு அல்லது எட்டு நொடிகள் கழித்துதான் ஸ்டார்ட் மெனுவே வரும். இதை ரெஜிஸ்டரியில் மாறுதல் செய்தால் வேகமாக வருமாறு அமைக்கலாம்.

முதலில் ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து ரன் காமண்டு தேர்வு செய்யவும்.
பின்னர் அதில் regedit என்று டைப் செய்து என்டர் தட்டவும்.



 
பின்னர் HKEY_CURRENT_USER ல் இடது புறம் உள்ள + மார்க் கிளிக் செய்யவும்.
பின்னர் கீழே CONTROL PANEL ல் இடது புறம் உள்ள + மார்க் கிளிக் செய்யவும்.
அதன் கீழே Desktop கிளிக் செய்து வலதுபுறம் உள்ள பாக்ஸில் MenuShowDelay என்ற இடத்தில் டபுள் கிளிக் செய்யவும். அதில் 400 என்று இருக்கும். அதை 0 என்று மாற்றி  வெளியேறவும். 
பின்னர் பாருங்கள் உங்கள் ஸ்டார்ட் மெனு எவ்வளவு வேகமாக இயங்குகிறது என்று.

எச்சரிக்கை  : ரெஜிஸ்டரியை திருத்தும் முன் ரெஜிஸ்டரி பேக் - அப் செய்து கொள்ளவும்.
ரெஜிஸ்டரி எப்படி பேக் - அப் செய்வது எளிய வழி கீழே
முதலில் ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து ரன் காமண்டு தேர்வு செய்யவும்.
பின்னர் அதில் regedit என்று டைப் செய்து என்டர் தட்டவும்.
பின்னர் File மெனுவை கிளிக் செய்து Export என்பதை தேர்வு செய்யவும். எந்த இடத்தில் சேமிக்கவிருக்கிறிர்களோ அதை தேர்வு செய்து சேமிக்கவும்.

நன்றி
 



1 ஊக்கப்படுத்தியவர்கள்:

Muthu Kumar N said...

வடிவேலன் மிக்க நன்றி

பயன்படுத்திப் பார்த்தேன் அருமையாக இருந்தது, ஒரு தொல்லை தீர்ந்தது.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

Post a Comment

வாருங்கள் உங்கள் மேலான கருத்துகள் என்னை இன்னும் மெருகூட்டச் செய்யும்

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Google Translator

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:


உங்கள் கேள்விகளை என்னிடம் கேட்க

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

Add to Google Reader or Homepage

என்னைப் பற்றி

My photo
Chennai, Tamilnadu, India

இதுவரை பதிவு செய்தவை