இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

நண்பர்களே இந்த வருடம் என் வாழ்வில் மறக்க முடியாத வருடமாக அமைந்தது முதன் முறையாக ஒரு சின்னத்திரையில் தோன்றியது அதற்கு முதல் காரணம் பிரபு மற்றும் NDTV தொலைக்காட்சி நிறுவனத்தினர்.  இதற்கு காரணம் உங்களை போன்றோர் பெரும்பாலானோர் கொடுத்த ஆதரவு மட்டுமே.  இதற்கு என்ன கைமாறு செய்வது (தினம் ஒரு மென்பொருள் கொடேன் என்று கேட்பது கேட்கிறது)  முடிந்தவரை ஏதாவது செய்கிறேன்.  வேலைப்பளு அதிகமிருப்பதால் முன்னைப்போல் நிறைய பதிவுகள் எழுத முடியவில்லை.  புது வருடத்தில் புதிய பதிவுகள் நல்ல மென்பொருட்களுடன் விரைவில் சந்திக்கிறேன்.  அனைத்து பதிவர்களுக்கும், அனைத்து வாசகர்களுக்கும் அனைத்து திரட்டிகளுக்கும், என்னை பின் தொடரும் பாலோயருக்கும்  என் இனிய உள்ளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

WISH YOU HAPPY NEW YEAR

அனைவருக்கு என் இனிய உள்ளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்


» Read More...

இலவசமான சட்டரீதியான ஒரு வருடத்திற்கான டிஸ்க் கீளினர் மென்பொருள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி


நண்பர்களே உங்கள் கணிணி திரையை கிறிஸ்துமஸ் கால கணிணி திரையாக ஆக்க இந்த மென்பொருள் மூலம் உதவும்.  இந்த மென்பொருள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் 2004 ஆம் ஆண்டு உருவாக்கி வெளியிடப்பட்டது. உபயோகித்து பாருங்கள் மென்பொருள் தரவிறக்க சுட்டி குறிப்பு : இதை தரவிறக்க உங்கள் கணிணியில் நிறுவி உள்ள விண்டோஸ்  உண்மையானதாக இருக்க வேண்டும்

உங்கள் கணிணியில் உள்ள தேவையில்லத தற்காலிக கோப்புகள் மற்றும் இணையதள நடவடிக்கைகளை நீக்க நீங்கள் சிசி கீளீனர் என்ற மென்பொருளை உபயோகித்திருப்பீர்கள்.  அந்த மென்பொருள் போன்றது இந்த மென்பொருள் ஆனால் அதை விட மிகவும் திறமையான வேகமான மென்பொருள் இதன் மூலம் நீக்க முடியாத தற்காலிக கோப்புகளை மற்றும் இணையத்தளத்தில் உலா வரும்போது நாம் பார்த்த இணையத்தளங்கள் அதனுடன் சேர்ந்த வீடியோ ஆடியோ கோப்புகள் அனைத்தையும் அழிக்க வல்லது இந்த மென்பொருள் ஜனவரி 31 2010 வரை சாப்ட்பீடியா என்ற நிறுவனத்திற்காக இலவசமாக தரப்படுகிறது இந்த மென்பொருளை தரவிறக்க எளிய வழி கீழே கொடுத்துள்ளேன் இந்த அரிய வாய்ப்பினை அனைவரும் உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இங்கு சுட்டி சென்று உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் உங்கள் முகவரிக்கு உங்களுக்குரிய ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைப்பார்கள்.

அந்த மின்னஞ்சலில் லைசென்ஸ் பெறுவதற்காக அவர்கள் தளத்திற்கு ஒரு லின்க் கொடுத்திருப்பார்கள்.  

அதை கிளிக் செய்யுங்கள் அவர்கள் தளத்திற்கு இட்டு செல்லும்.

அங்கு கீழே Free Get Key என்று இருக்கும் அதை தேர்வு செய்யுங்கள். 

இப்பொழுது உங்கள் Key உங்களுக்கு காண கிடைக்கும். 

அதற்கு கீழே மென்பொருளின் தரவிறக்க லின்க் கொடுத்திருப்பார்கள் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஊக்கமே எனக்கான ஊட்டச்சத்து நான் வெளியிடும் மென்பொருட்கள் எனது வலைப்பூ குறித்த உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டுகிறேன்.

இயேசு கிறிஸ்து பிறந்த நாளான நாளை கொண்டாடும் வகையில் அனைவரும்  அனைவரிடமும் அன்பு செலுத்துவோம். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

2009ல் மிகவும் பிரபலமான அதிகம் பேர் தரவிறக்கிய மென்பொருட்கள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

 நண்பர்களே 2009ல் மிகவும் பிரபலமாகவும் நிறைய பயனாளர்கள் தரவிறக்கம் செய்த மென்பொருட்களை பற்றி இங்கு பட்டியலிடப்படுகிறது.  இது என் சொந்த கருத்து அல்ல ஒரு இணையத்தளத்தின் கருத்து.

உபுண்டு எல்லோருக்கும் தெரியும் அதை விண்டோஸுக்குள் நிறுவி உபயோகிக்க இந்த போர்டபிள் உபுண்டு சுட்டி
விண்டோஸ் எக்ஸ்பியை விண்டோஸ் 7 போல உருமாற்றம் செய்ய மென்பொருள் சுட்டி

ஒரு கணிணிக்கு தேவையான அடிப்படையான அனைத்து மென்பொருட்களையும் ஒரே மென்பொருள் மூலம் நிறுவ இந்த வலைத்தளம். சுட்டி


ஒரு கணிணிக்கு இலவசமாக தரும் முதல்தர ஆன்டிவைரஸ் ஏவிஜி ஆன்டி வைரஸ் சுட்டி


வந்த வேகத்திலேயே வெற்றி பெற்ற வேகமான உலாவியாக இது கருதப்படுகிறது கூகிள் நிறுவனத்தின் வெளியீடான கூகிள் குரோம் உலாவி  சுட்டி
வலை உலாவியின் ராஜாவாக திகழும் நெருப்பு நரி உலாவி சுட்டி


மைக்ரோசாப்டின் அவுட்லுக்குக்கு மாற்றாக திகழும் தண்டர்பேர்டு மின்னஞ்சல் கிளையன்ட் மென்பொருள் சுட்டி இது மட்டுமல்லாமல் வின் ஜிப், வின் ஆம்ப், இது போன்ற நிறைய மென்பொருட்கள் உள்ளது நேரம் இல்லாததால் இத்துடன் முடிக்கிறேன்.


ஒரு சிறிய மாற்றம் செய்துள்ளனர் கூகிள் தேடுபொறியில் அது என்ன புத்தாண்டு பிறக்க சிறிது நாளே உள்ள நிலையில் கூகிள் தன்னுடைய தேடுபொறியில் புத்தாண்டு பிறக்க எவ்வளவு நேரம் உள்ளது என்பதை ஈஸ்டர் எக் என சொல்லப்படும் நிலையில் மறைத்து வைத்துள்ளனர்.  அதை கண்டுபிடிக்க கூகிள் முகப்பு பக்கத்தை திறந்து வைத்துக் கொண்டு I'm Feeling lucky என்ற பொத்தானை ஒரு முறை அமுக்குங்கள் ஒரு புதிய உதவி பக்கம் திறக்கும் பிறகு பின்னால் சென்ற பிறகு மீண்டும் ஒரு முறை I'm Feeling Lucky என்ற பொத்தானை அழுத்துங்கள் இப்பொழுது கீழே கவுண்ட் டவுன் தெரியும்.
உங்களிடம் ஒரு புகைப்படம் அதன் பின்புலம் உங்களுக்கு புகைப்படவில்லை எப்படி நீக்க முடியும் ஒன்று அடோபின் போட்டோஷாப் மென்பொருள் தேவை அல்லது இந்த மென்பொருள் உங்களுக்கு தேவை இந்த மென்பொருள் மூலம் ஒரு புகைப்படத்தின் பின்புலம் சுலபமாக நீக்கலாம்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சட்டரீதியான அபி பைன் ரீடர் மென்பொருள் மற்றும் ஆன்டிவைரஸை நீக்கும் மென்பொருள்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி


நண்பர்களே சில நேரங்களில் நாம் உபயோகிக்கும் ஆன்டி வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் லைசென்ஸ் முடியும் பொழுது புதியதாக புதுப்பிக்க சொல்லி வரும் ஆனால் நாம் வேறொரு மென்பொருளுக்கு தாவ காத்துக் கொண்டிருப்போம்.  அந்த மாதிரி நேரத்தில் ஆன்டிவைரஸை அன் இன்ஸ்டால் செய்தால் சரியாக அன் இன்ஸ்டால் ஆகாமால் ரெஜிஸ்டரிக்குறிப்புகள் மற்றும் டிஎல்எல் கோப்புகள் அமர்ந்து விடும். இதனால் நம்மல் புதிய ஆன்டி வைரஸ் பதிய பெரிய தடங்கலாக இருக்கும்.  இது போன்ற ஆன்டி வைரஸ்களை நீக்க ஒரு மென்பொருள் சுட்டி  இது போல் அனைத்து வகையான மென்பொருட்களையும் நீக்கலாம்.ஒசிஆர் ( OCR ) என்பது ஒரு மென்பொருள் அந்த மென்பொருள் நீங்கள் வாங்கும் ஸ்கேனருடன்  இணைந்து தரப்படும்.  இந்த மென்பொருள் ஒரு நிறுவனம் பல காலமாக தனியாக தயாரித்து விற்பனை செய்துவருகிறது அந்த மென்பொருளின் பெயர் அபி பைன் ரீடர்.  இந்த மென்பொருள் இலவசமாக சட்டரீதியாக தரப்படுகிறது இந்த மென்பொருளை பெற நீங்கள் செய்ய வேண்டியது கீழே தருகிறேன் பின்பற்றுங்கள்.   இந்த சலுகை எவ்வளவு நாட்கள் என்று தெரியாது அதனால் முடிந்தவரை விரைவாக செயல்படுங்கள்.

முதலில் இங்கே செல்லுங்கள்  சுட்டி

பிறகு அங்கே கீழே பார்த்தால் ஒரு விண்ணப்பம் இருக்கும் அங்கு உங்கள் பெயர் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள்.  உடனே உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அபிபைன் ரீடரின் சீரியல் கீ வந்துவிடும்.  அதை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.  மிக முக்கியம் இங்கு கொடுக்கப்படும் பெயர் முகவரி மின்னஞ்சல் மென்பொருள் நிறுவும் பொழுது கொடுக்க வேண்டியிருக்கும். பத்திரமாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இந்த சுட்டியை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்குங்கள். சுட்டி பிறகு மென்பொருளை நிறுவிய பிறகு எப்படி ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பதை கீழ் உள்ள படங்கள் விளக்கும். 

இருநூறு வகையான போர்டபிள் மென்பொருட்கள் உங்களுக்காக இங்கே ஒருங்கிணைந்த மென்பொருளுக்குள் கிடைக்கிறது.  சுட்டி இதில் இரண்டு வகையான மென்பொருள் உள்ளது லைட் மற்றும் புல் இதில் உங்களுக்கு எது உதவுமோ அதை எடுத்துக் கொண்டு எங்கு வேண்டுமானலும் சென்று உபயோகப்படுத்தலாம். 


இதில் இணைந்துள்ள மென்பொருட்களின் அணிவரிசையை இங்கு காணலாம்.  சுட்டி

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

அனானியின் கேள்விக்கு பதில்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே ஒரு அனானி நண்பர் என்னை ஒரு கேள்வி கேட்டுள்ளார்.  இதற்கு பதில் அளிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது.


Anonymous has left a new comment on your post "டிஜெயுவி என்ற கோப்பும் அதன் பயன்களும்":

சிலநாட்களுக்குமுன் திரு சைபர்சிம்மன் தனது பதிவுகள் அப்படியே பிறர் வலைத் தளங்களில் பதிவு செய்யப்படுவதைப் பற்றி எழுதியிருந்தபோது அதை வன்மையாகக் கண்டித்தவர்களில் நீங்களும் ஒருவர். ஆனால், நீங்கள் இடும் பதிவுகள் பல ஆங்கிலத்தில் வரும் தொழில்துட்ப பதிவுகளின் தமிழாக்கம்தானே! அவற்றைத் தமோழில் நீங்கள் தருவதைக்கூடப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆந்த ஆங்கிலப் பதிவுகளுக்கு நீங்கள் நன்றி கூடச் சொல்வதில்லயே! அதுவும் அந்தப் பதிவுகளில் உள்ள படங்களைக்கூட உங்கள் பதிவுகளில் அப்படியே பயன்படுத்தும்போது! உதாரணமாக இன்று நீங்கள் வெளியிட்டிருக்கும் இந்த DJVU பதிவு இன்று வந்திருக்கும் www.tothepc.com பதிவின் நகல்தானே!


ஆனால் அவர் கூறுவது உண்மைதான்!!!   இது மற்ற வலைத்தளங்களின் தமிழாக்கம் மட்டுமல்ல!! என் கணிணியில் உபயோகித்து பார்த்து விட்டு எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது மற்றவர்களுக்கு சிறந்தது என்று கூறுகிறேன் இது தவறா ?? இது தவறில்லை என்றே தோன்றுகிறது.  கருத்துகளை காப்பி அடிப்பதற்கும் வேறு மொழியில் மொழிபெயர்த்து எம் மொழி மக்களுக்கு கூறுவதற்கும் வித்தியாசம் நிறைய உண்டு.   இந்த மென்பொருள் நமக்கு சொந்தம் என்று நாம் இதுவரை எந்த மென்பொருளை கூறியதில்ல  உதாரணத்திற்கு ஒரு திரைப்படம் முதல்தர தியேட்டருக்கு வந்துவிட்டு இரண்டாம் தர தியேட்டருக்கு வருவதில்லையா?? அதுபோல் வேற்று மொழி திரைப்படங்கள் இங்கு திரையிடுவதில்லையா?? ஒரு நல்ல திரைப்படம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேறு மொழிகளில் மாற்ற்ப்படுவதில்லையா இதனால் திரைப்படம் எடுத்தவருக்கு மட்டுமே பெருமை அவரவர் மொழிகளில் எடுப்பதால் அவரவருக்கு பெருமை. எப்படி பார்த்தாலும் அனைவருக்கும் அந்த திரைப்படம் பெயரை பெற்றுக் கொடுப்பதில்லையா ஒரு திரைப்படம் நூறு நாட்கள் ஒடினால் திரைப்படத்தை கூறுவோமே தவிர ஒடுகின்ற திரையரங்கை கூறுவதில்லை அதுபோல ஒரு மென்பொருள் பற்றி விளக்கி எம் மொழி மக்களுக்கு தெரிவதால்தான் வடிவமைத்தவருக்கு மட்டுமே நான் எழுதும் பெருமை அனைத்தும் போய் சேருமே தவிர மொழி மாற்றம் செய்து எழுதும் என்னை சேராது.  அதை மொழி மாற்றுவதால் என் மொழி மக்கள் என்னை பாராட்டுகிறார்கள் அதனால் ஆங்கிலத்தில் எழுதுகிறவர்கள் உலகத்தில் உள்ள அனைவரையும் சென்றடைகிறது.  எம் மொழியில் எழுதுவதால் எம் மொழி மக்கள் அனைவரையும் சென்றடைகிறது.  எம் மொழி மக்கள் வேண்டும் என்பதால்தான் இப்பொழுது உருவாக்குகிற மிக முக்கிய மென்பொருட்கள் அனைத்தும் தமிழ் மொழியை தாங்கி வருகிறது.  மொழி மாற்றம் செய்யும் நான் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. நிறைய ஆங்கில பதிவுகள் வேறு வெளி நாட்டு தளங்களை பார்த்து படித்தே எழுதுகிறார்கள் சொந்தமாக தேடி எழுதுவதில்லை அது எத்தனை பேருக்கு தெரியும்.  சொல்லுங்கள்
      
என் வலைப்பதிவுகளை படித்து இதுவரை மென்பொருளை பற்றி தெரியாதவர்கள் கூட ஒரளவுகு புரிந்து கொண்டுள்ளார்கள்.   நான் கூறும் மென்பொருள்கள் அதிகபட்சம் அனைவரும் எடுத்தாளக்கூடிய உரிமம் கொண்ட சுதந்திர இலவச கட்டற்ற மென்பொருளாகதான் இருக்கிறது.  அது மட்டுமில்லை சட்டரீதியான இலவச மென்பொருட்கள் மட்டும்தான் கொடுக்கிறேன். அவர் கூறியுள்ள DJUV என்ற வகை கூட சுதந்திர இலவச கட்டற்ற மென்பொருள்தான்.

அவருக்கு நன்றி கூறவில்லை என்பதுதான் பிரச்சனை என்பதால் இதுவரை உதவிய அனைத்து இணையத்தளங்களுக்கும் இணைய எழுத்தாளர்களுக்கும் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கும் இனிமேல் உதவ போகிற அனைத்து இணையத்தளங்களுக்கும் இணைய எழுத்தாளர்களுக்கும் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி போதுமா? அனானி அவர்களே!!!நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

டிஜெயுவி என்ற கோப்பும் அதன் பயன்களும்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 250க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

நண்பர்களே DJUV என்று ஒரு கோப்பு உள்ளது தெரியாதவர்கள் இங்கு போய் தெரிந்து கொள்ளலாம். சுட்டி


இது ஒரு .jpeg போன்ற ஒரு கோப்பு வகையாகும். இதனுள் மிகவும் அதிகமாக உயர்திறன் மிக்க புகைப்படங்களை மிகவும் சிறிய கோப்பாக்கி சுருக்கி வைத்து காட்டும் கோப்பாகும். இன்னும் இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள் சுட்டி

உங்கள் புகைப்படம் மற்றும் பிடிஎப் கோப்புகளை DJUV கோப்பாக மாற்ற இங்கே செல்லுங்கள் சுட்டி

சரி ஜேபிஜி கோப்பை டிஜுவி கோப்பாக மாற்றியாகி விட்டது இதை எப்படி திறந்து பார்ப்பது இதற்கு உதவ வருகிறது இந்த மென்பொருள் சுட்டி இது ஒரு திறந்த நிலை கட்டற்ற மென்பொருளும் கூட என்பது இதன் சிறப்பு.

உங்களிடம் ஒரு எம்கேவி வகை வீடியோ கோப்பு இருக்கிறது. தரவிறக்கும் போது பாதியிலேயே நின்று விட்டுவிட்டது அல்லது பழுது ஆகிவிட்டது திறக்க வில்லை என்ன செய்யலாம் இங்கு சென்று இந்த மென்பொருளை தரவிறக்கி நேரடியாக இயக்குங்கள். இதை நிறுவ வேண்டிய அவசியமில்லை. அந்த பழுது ஆன எம்கேவி கோப்பை Drag and Drop மவுஸால் இழுத்து கொண்டு வந்து விடுங்கள். இந்த மென்பொருள் பழுது பார்த்து கொடுத்து விடும். இதுவும் ஒரு திறந்த நிலை கட்டற்ற மென்பொருளும் கூட என்பது இதன் சிறப்பு. மென்பொருள் சுட்டி


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

என்டிடிவியின் தமிழ் தொழில்நுட்ப பதிவர்களின் பேட்டியின் ஒளிப்படம்

நண்பர்களே நேற்று ஒளிபரப்பான தமிழ் தொழில்நுட்ப பதிவர்களின் பேட்டியை காணுங்கள்
இந்த அளவுக்கு நம் வலைப்பதிவர்களை இட்டுச் செல்ல அரும்பாடுபட்ட சாய்தாசன், சைபர்சிம்மன் மற்றும் என் டி டிவி ஹிண்டு தொலைக்காட்சிக்கும் இந்த நேர்காணலில் பங்கு கொள்ளாவிடினும் எங்களை ஊக்குவித்த டிவிஎஸ்50 மற்ற தோழர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.  விரைவில் ஒரு லட்சம் ஹிட்ஸ்களை குவிக்க போகிறது நம் தளம் அதற்கும் நீங்களே காரணம்.

நன்றி மீண்டும் வருகிறேன்.

» Read More...

கூகிள் வேவ் இன்விடேஷன் இலவசம் மற்றும் மென்பொருட்கள்

நண்பர்களே உங்களுக்கு பிடித்த வண்ணம் உள்ளது அந்த வலைத்தளத்தில் ஆனால் அதன் கணிணியில் வண்ணத்திற்கு என்று ஒரு கோடு உள்ளதே அதை எவ்வாறு கண்டுபிடிப்பது இந்த மென்பொருள் மூலம் முடியும்.  இந்த மென்பொருளை திறந்து வைத்துக் கொண்டு மவுஸ் கர்சரை அந்த வண்ணத்தின் மேல் சுட்டினால் இதன் வண்ண கோடை காட்டி கொடுத்து விடும். மென்பொருள் சுட்டி

இன்னுமொரு ஒரு புதிய நீரோ போல் ஒரு சிடி ட்விடி பர்னர் பைனல் பர்னர் இதன் தரவிறக்கம் இங்கே சுட்டிகூகிளின் புதிய வரிசையான வேவ் எனக்கு என் நண்பரும் வாசகருமான பிரபாகரன் அவர்களின் நண்பர்கள் மூலம் கிடைக்கப்பெற்றது.  இப்பொழுது என்னால்  கூகிள் வேவ் இன்விடேஷன் பத்து பேருக்கு தர முடியும். அனைவருக்கும் கொடுக்க ஆசை ஆனால் பத்துதான் உள்ளது என்பதால் ஒரு சிறிய போட்டி.  இந்த தளம் ஏன் உங்களுக்கு பிடித்திருக்கிறது? இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?  உங்கள் கருத்தை  உடனே மின்னஞ்சல் மூலம் அல்லது பின்னூட்டம் இடவும்.  உங்களுடைய மின்னஞ்சல் முகவரி முக்கியம்.  சிறந்த பத்து கருத்துக்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ஒரு இன்விடேஷன் தரப்படும்.


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

இனிய செய்தி மற்றும் சட்டரீதியான மென்பொருள் விடுமுறை கோலாகலம்

நண்பர்களே  முதலில் ஒரு இனிய செய்தி நம்மில் பதிவெழுதும் சிலர் மட்டுமே தமிழில் தொழில்நுட்பம் குறித்து எழுதி வருகிறோம்.  அவர்கள் எவ்வாறு எழுதுகிறார்கள்? எழுதுவதால் என்ன பயன்? இதன் மூலம் இவர்களுக்கு கிடைப்பது என்ன? என்பது குறித்து NDTV-HINDU என்று செய்தி நிறுவனம் வருகிற வெள்ளிக்கிழமை இரவு பைட் இட் BYTE IT என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்ப விருக்கிறார்கள். 


இந்த ஒளிபரப்பில் என்னுடைய சிறு பங்களிப்பும் உண்டு நம்மையும் பேட்டி எடுத்து இருக்கிறார்கள்.  ஆகையால் வருகிற வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணிக்கு உங்கள் தொலைக்காட்சி பெட்டியில் இந்நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்.


ஏர்டெல்லின் ஒரு இலவச ப்ளான்  வெகு சிலருக்கு மட்டுமே அவர்கள் இந்த வகையான செல்பேசி வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இணையத்தில் உலாவ

 Nokia 5130K       Samsung Star
 Nokia E63          Samsung Star WiFi
 Nokia 6700         Samsung Star 3G
 Nokia N79          Samsung F480
 Nokia 5800         Samsung Jet
 Nokia N97          Samsung Omnia HD
 Nokia E71          Samsung Corby
 Nokia 6303     

மூன்று மாதத்திற்கு இலவசமாக 100 எம்பி தரவிறக்கம் தருகிறார்கள் செய்தி சுட்டி

நீங்கள் வைத்திருக்கும் வீடியோ கோப்பில் இருந்து புகைப்படம் எடுக்க இந்த மென்பொருள் இதில் படம் ஒடிக் கொண்டிருக்கும் போது மவுசை பிடித்து இழுத்து விட்டால் போதும் உடனே புகைப்படம் கிடைக்கும் அதாவது Drag and Drop வசது உண்டு.  சுட்டி
நீங்கள் வைத்திருக்கும் பிடிஎப் கோப்பில் எடிட் செய்ய முடியாதபடி கடவுச்சொல் கொடுத்து பாதுகாத்து வைத்திருப்பர்.  அவ்வாறு உள்ள கோப்புகளை இந்த மென்பொருள் கொண்டு கடவுச்சொல் நீக்கலாம். இது ஒரு இலவசமான சட்டரீதியான மென்பொருள். இந்த தளத்தில் சென்று உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் கொடுத்தால் போதும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுக்கு லைசென்ஸ் கோடு அனுப்பி விடுவார்கள்.  இணையதள சுட்டி
மென்பொருளை தரவிறக்க சுட்டி


இது ஒரு விடுமுறை கொண்டாட்ட அறிவிப்பு ஆதலால் எவ்வளவு காலத்திற்கு இந்த சலுகை நீடிக்கும் என்று கூற முடியாது முந்துங்கள் நண்பர்களே. நீங்கள் முந்தினால் உங்கள் நண்பர்களுக்கும் கொடுத்து உதவுங்கள். 


நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

ட்ரைவர் அனைத்தும் தானாக மேம்படுத்த மென்பொருள்

நண்பர்களே அனைவர் வீட்டிலும் கணிணி இணைய இணைப்பு இல்லாமல் இருக்கவில்லை பெரும்பாலும்.  அதனால் அனைவரும் அவ்வப்போது உபயோகப்படுத்து வன்பொருட்களுக்கு ட்ரைவர் அப்டேட் செய்வது அவசியம்.  ஒவ்வொரு முறையும் நாம் ஒவ்வொரு வன்பொருளுகும் ட்ரைவர் தேடி அப்டேட் செய்வது என்பது இயலாத காரியம். இதற்கு வருகிறது இலவச டிவைஸ் டாக்டர்.  இந்த மென்பொருளை நிறுவி விட்டால் ஒவ்வொரு வன்பொருட்களுக்கும் அப்பொழுது என்ன புதிய ட்ரைவரோ அதை தானாக தரவிறக்கி நிறுவி விடும்.  மென்பொருள் தரவிறக்க சுட்டி


உங்கள் புகைப்படத்தை காலண்டராக மாற்றி அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டுமா இங்கு சென்று உங்கள் குழந்தைகள் புகைப்படத்தை கொடுத்து ஒரு காலண்டாராக மாற்றி வீட்டில் தொங்க விட விருப்பமா வெவ்வேறு அளவுகளில் காலண்டர் பெற இணையத்தளம்.  சுட்டி

உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியில் ஒரு மென்பொருளில் வேலை செய்யும்பொழுது அது மினிமைஸ் ஆகும் அந்த மினிமைஸ் ஆன கோப்பில் ஒரு தம்ப்நெயில் உடன் மினிமைஸ் ஆக உட்கார இந்த மென்பொருள் உபயோகபடுகிறது மிகவும் உபயோகமானது கீழுள்ள புகைப்படம் பாருங்கள் புரியும். இது விண்டோஸ் எக்ஸ்பியில் மட்டுமே வேலை செய்யும்.  சுட்டி


போட்டோக்கள் குறித்த ஒரு புதிய வலைத்தளம் சுட்டி
 வாருங்கள் கருத்து சொல்லுங்கள்
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

Advance System Care சட்டரீதியான மென்பொருள் இலவசமாக

நண்பர்களே உங்கள் கணிணியில் உள்ள வன்தட்டுகளை டிபிராக் செய்தல், ரெஜிஸ்டரி கிளீன் செய்தல் இதையெல்லாம் செய்யும் Advance System Care Pro மென்பொருள் இலவசமாக சட்ட ரீதியானது உங்களுக்காக.இங்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள் நேரடியாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தரவிறக்க இணைப்பும் லைசென்ஸ் கோடும் வந்து விடும்.

இணையதள சுட்டி
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

வீடியோ பார்க்க, வெட்ட, மாற்ற புகைப்படம் மாற்ற அனைத்திற்கும் ஒரே மென்பொருள் இலவசமாக

நண்பர்களே நாம் எப்பொழுதும் வீடியோக்களை பார்க்க ஒரு ப்ளேயர் அந்த வீடியோவை கட் செய்ய வேறோரு மென்பொருள் வீடியோவை வேறொரு கோப்பின் வடிவாக மாற்ற ஒரு மென்பொருள்   உங்கள் போட்டோவினை வேறொரு அளவிற்கு மாற்ற போட்டோவினை ஸ்லைடு ஷோவாக மாற்ற என்று பலதரப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்துவோம்.


இதன்மூலம் காலநேரமும் கணிணியில் செய்திறன் மற்றும் வன் தட்டின் இடமும் அதிகரிக்கும் ஸ்டார்ட் மெனுவில் அது ஒரு நீளத்திற்கு தனியாக இடத்தினை அடைத்துக் கொண்டிருக்கும்.  இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஒரு நான்கு மென்பொருள் என்ஜினியர் சேர்ந்து ஒரு ஒபன் சோர்ஸ் மென்பொருளை உருவாக்கி இலவசமாக கொடுத்திருக்கின்றனர். இந்த மென்பொருளின் பெயர் மீடியா கோப்.


இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பின் வடிவங்கள்

வீடியோ - mp3, wav, aac, wma, flac, m4a, ac3, rmvb, mp4, 3gp, wmv, mov, avi, divx, mpg, flv, mkv, vob இது சில மட்டுமே இன்னும் நிறைய

சப்டைட்டில் இல்லாத திரைப்படங்களில் சப்டைட்டில் தனியாக சேர்க்க முடியும்.

மேற்கூறிய அனைத்து கோப்புகளும் வீடியோ மாற்றியாக செயல்படும்.  இந்த கோப்புகளிலிருந்து எம்பி3 பிரித்தெடுக்க முடியும்.

புகைப்படங்கள் -  jpg, bmp, gif, tiff, png, emf, wmf

மென்பொருளின் அளவு 7.92 எம்பி மட்டுமே.

முற்றிலும் இலவசம் மென்பொருள்

மென்பொருள் தரவிறக்க சுட்டி 
நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

சட்ட ரீதியான Win X DVD Author மென்பொருள் இலவசமாக அக்டோபர் 31 வரை மட்டுமே

நண்பர்களே நீங்கள் ஒரு அசைவ சாப்பாடு பிரியரா விதம் விதமாக அசைவம்  சமைத்து சாப்பிட ஆசையா இதோ ஒரு தோழி மிகவும் அழகாக தினம் ஒரு அசைவ சமையலை எப்படி செய்வது என்று மிகவும் அழகாக விளக்கி எழுதுகிறார் அவர் தளத்திற்கு செல்ல சுட்டிசட்ட ரீதியான WinX DVD Author மென்பொருள் இலவசமாக  அக்டோபர் 31 வரை இந்த சலுகை இந்த மென்பொருள் மூலம் என்னவெல்லாம் செய்யலாம்

எந்த ஒரு வீடியோவிலிருந்தும் டிவிடி ஆக மாற்றி நேரடியாக டிவிடியில் வீடியோ டிவிடியாக பதியலாம்.

டிவிடியில் சப் டைட்டில் சேர்க்கலாம்.

டிவிடி மெனு உருவாக்கலாம்.

வீடியோ டிவிடி உருவாக்கலாம்.

நேரடி மென்பொருள் தரவிறக்க சுட்டி

இணையத்தள சுட்டி


நாம் ஒவ்வொரு முறை ஒரு கோப்பை உருவாக்கி ஒரு போல்டரில் போட்டு வைப்போம். பிறகு அந்த கோப்பை நீக்கி விடுவோம். பிறகு அந்த போல்டர் மட்டும் அந்தரத்தில் தொங்கும்.  அது போல் அதிகமாக உள்ள காலி போல்டர்களை நீக்க இந்த மென்பொருள் சுட்டியூஎஸ்பி டிரைவில் உபயோகப்படுத்தக்கூடிய சிறு மென்பொருள் இது இதற்கு பல சிறு மென்பொருட்கள் உள்ளன.  உதாரணத்திற்கு  கடைசியாக உங்கள் கணிணியில் எந்த  யூஎஸ்பி வன் பொருள் உபயோகப்படுத்தப்பட்டது என்று கண்டறியலாம்.

Blue Screen பிழைக்கு என்ன காரணங்கள் உள்ளது என்று அறியலாம்.

உங்கள் கணிணியில் நிறுவியுள்ள மென்பொருள்களின் Product Key கண்டுபிடிக்கலாம்.  இது போல நூறு வகையான குட்டி மென்பொருட்கள் உள்ளன.

மென்பொருள் தரவிறக்க சுட்டிஉங்கள் கணிணியில் சிடி ட்ரைவை வெளியே எடுக்க தள்ள நேரடியாக கணிணியில் இருந்து இயக்க மென்பொருள் சுட்டி


நீங்கள் எழுதும் ஆங்கில எழுத்துக்களை அப்படியே பின்னாளிலிருந்டுஎழுத வேண்டுமா உதராணத்திற்கு http://gouthaminfotech.blogspot.com  என்பதை moc.topsgolb.hcetofnimahtuog//:ptth  என்று வரவழைக்க வேண்டுமா அதற்கு இந்த மென்பொருள் உதவும் மென்பொருள் சுட்டிநன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

300வது பதிவையொட்டி சிறப்பு சட்டரீதியான மென்பொருட்கள் ஆன்டிவைரஸ்கள்


நண்பர்களே தொடர்ந்து எழுத முடியாமல் அலுவலக வேலைப்பளு அதிகரித்திருப்பதால் பிப்ரவரிக்கு பிறகு தொடர்ந்து தினம் ஒரு பதிவு எழுதுவேன். முடியும் பொழுதெல்லாம் ஒரு பதிவு என்று எழுதுகிறேன்  தொடர்ந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  தொடர்ந்து பதிவுகள் எழுதமுடியததால் மன்னிக்கவும்.

அக்டோபர்  இருபத்திரண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியிடுவதை கொண்டாடுவதற்காக பாண்டா ஆன்டிவைரஸ் நிறுவனத்தினர் 22-10-2009 அன்று மட்டும் இலவசமாக ஒருவருடத்திற்கான Panda Internet Security 2010 இலவசமாக கொடுக்கின்றனர்.


இதேபோல் காஸ்பர்ஸ்கை ஆன்டி வைரஸ் நிறுவனத்தினரும் அதே தேதியில் இலவசமாக ஒருவருடத்திற்கான ஆன்டிவைரஸ் வழங்குகின்றனர்.  இணையத்தள சுட்டி

22-10-2009 மறவாதீர் அனைவருக்கும் இலவசங்களை வாரிக் கொடுக்க போகிறது அனைத்து மென்பொருள் நிறுவனங்களும்

பேஸ்புக் என்னும் வலைத்தளத்தில் உங்கள் கணக்கினுள் ஏதாவது ஒரு நண்பரின் கோரிக்கை, செய்திகள் வந்தால் உடனே உங்கள் கணிணியில் டெஸ்க்டாபில் தெரிய இந்த மென்பொருள் போதும்.  இதற்காக உங்கள் வலைஉலாவியில் நுழைய தேவையில்லை.  மென்பொருள் சுட்டி


உங்கள் கணிணியில் உள்ள வன்தட்டுகளின் சூட்டினை தெரிந்து கொள்ள இந்த மென்பொருள்.  ஒவ்வொரு வன்தட்டும் எவ்வளவு சூடு ஆகிறது என்று தெரிந்து கொள்ளலாம். இது பழைய DOS மோடில் இயங்குகிறது இந்த மென்பொருள்.  சுட்டி இதை தரவிறக்கிய பின் Winzip மூலம் Unzip செய்யுங்கள். பிறகு எங்கு வேண்டுமோ. அங்கு சேமியுங்கள் பிறகு Start மெனு கிளிக் செய்து அதில் Run தேர்வு செய்து அதில் CMD என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள். நீங்கள் சேமித்த போல்டர் பகுதிக்கு disktemp.exe என்று டைப் செய்து என்டர் தட்டுங்கள் உங்கள் வன்தட்டின் சூட்டினை தெரிந்து கொள்ளலாம்.இலவச ஆடியோ வீடியோ கன்வெர்ட்டர் உங்களுக்காக சுட்டி
இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்புகள்

VOB, FLV, MPG, AVI, MPEG, MOV, WAV, MP3 into MP3, AVI, WAV, WMV, MPEG, FLV, MKV, RM, 3GP, 3GPP2, MOV and iPod video format.இணையத்தளத்தில் சிறு கோப்புகளை வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் மூலம் ஸ்கேன் செய்ய இந்த வலைத்தளம் உதவும்.  இந்த வலைத்தளத்தில் 40 வகையான ஆன்டிவைரஸ் மென்பொருள் மூலம் சோதிக்கப்படுகிறது.  இணையத்தள சுட்டி


கீழ்கண்ட நாற்பது வகையான ஆன்டிவைரஸ்கள் மூலம்தான் சோதிக்கப்படுகிறது.

A-squared, AhnLab-V3, AntiVir , Antiy-AVL, Authentium, Avast, AVG, BitDefender, CAT-QuickHeal, ClamAV, Comodo, DrWeb, eSafe, eTrust-Vet, F-Prot, F-Secure, Fortinet , Gdata, Ikarus, Jiangmin, K7AntiVirus, Kaspersky, McAfee, McAfee+Artemis, McAfee-GW-Edition, Microsoft, NOD32, Norman, nProtect, Panda, PCTools, Rising, Sophos, Sunbelt, Symantec, TheHacker, TrendMicro, VBA32, ViRobot, VirusBuster.

இந்த பதிவு என்னுடைய 300வது பதிவு இந்த பதிவை என் பதிவுகளை படித்து பெரும் ஆதரவு தரும் நண்பர்களுக்கும் தமிழ் கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கும் தமிழ்10, தமிழ்மணம், தமிழிஸ், திரட்டி, அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.  இது உங்களால் மட்டுமே முடிந்தது.  நன்றி நன்றி நன்றி.

நன்றி மீண்டும் வருகிறேன்

» Read More...

நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும்,800க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும்
நன்றி..நன்றி..நன்றி

எழுதியதில் அனைவருக்கும் பிடித்த பத்து பதிவுகள்

Free Offer

Google Translator

Recent Post

தமிழ் பதிவர்களின் பேட்டி

Extension Factory Builder

என்னைப் பற்றி

My photo

System Administrator  Part time Blogger

இதுவரை பதிவு செய்தவை